Pages

Saturday, January 30, 2010

நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள்

நேரம் போகவே மாட்டேங்கிறது... எல்லா வேலையையுமே சீக்கிரம் முடித்து விடுவேன். அதனால், இந்த நேரத்திற்குப் பிறகு போரடிக்கிறது என்று அடிக்கடி சொல்பவரா நீங்கள்? ஆம். என்றால், நீங்கள், கிடைக்கும் நேரத்தை, சரியாக பயன்படுத்திக் கொள்ளாத நபர் என் பது தான் உண்மை. நேரத்தை வீணடிக்காமல், பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதோ, சில டிப்ஸ் உங்களுக்காக...*
உங்கள் ஓய்வு நேரத்தில், செய்தித்தாள், பத்திரிகைகள் போன்றவற்றைப் படித்து, நாட்டு நடப்பு, அரசியல் நிலவரங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டு, உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.*
எதிலும் கம்ப்யூட்டர் மயமான இந்த காலத்தில், கம்ப் யூட் டர் பற்றி அடிப்படையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? கம்ப்யூட்டர் பேசிக் கோர்ஸ்களில் சேர்ந்து, நேரத்தை பயனுடையதாக்குங்கள்.*
புதிய மொழி ஏதாவது ஒன் றைக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த காலத்தில், புதிய மொழியைக் கற்றுக் கொள்ள, ஆசிரியரிடம் சென்று தான் கற்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற் காக விற்கப்படும் மொழிப் பயிற்சி புத்தகங்கள், காசெட்டுகளைப் படித்து பயன்பெறலாம்.*
தையல் வகுப்புகளில், சேரலாம் அல்லது கிராப்ட் ஒர்க், பெயின்டிங், எம்ப்ராய்டரி போன்ற கை வேலைப்பாடுகளில், ஈடுபாடு கொண்டவராக இருந்தால், அவற்றை கற்று பயன் பெறலாம்.*
இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால், தெரியாதவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். இதனால், உங்களுக்கு நேரம் போனதும் தெரியாது; அதே நேரம், பணம் ஈட்டவும் முடியும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.* விளையாட்டில் விருப்பம் உள்ளவராக இருந்தால், ஆங்காங்கு நடக்கும் "பிரிலிமினரி கோர்ஸ்'களில் சேர்ந்து, உங்களுக்கு பிடித்த விளையாட்டை கற்கலாம். உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால், உடல் உறுதி பெறுவதோடு, மனமகிழ்ச்சியையும் பெறலாம்.*
இசை மற்றும் நடனத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தால், அதில் உங்களுக்கு பிடித்தமானது ஏதாவது ஒன்றைக் கற்று நேரத்தை பயனுள்ளதாக்கலாம்.இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் விருப்பமுள்ளவர் களாக இருந்தால், ஓய்வு நேரத் தில் உங்கள் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கலாம்.*
பரபரப்பான இன்றைய காலகட்டத்தில், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது. எனவே, யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். இப்படி, உபயோகமான ஏதாவது ஒன்றை செய்துகொண்டிருந்தால், போரடிக்கிறதே என்று சொல்ல உங்களுக்கு நேரம் இருக்குமா? அதற்கு பதிலாக நீங்கள் நேரம் போதவில்லையே என்று கூற ஆரம்பித்து விடுவீர்கள்