Pages

Tuesday, December 30, 2008

வாழ்க்கையின் அடிப்படை நிபந்தனை

1. ஐந்து மணிக்கு எழுந்திரிக்க வேண்டும். தினம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
2. புத்தகம் மட்டும் படிக்க வேண்டும்.
3. தேவையற்ற பேச்சை நிறுத்த வேண்டும்.
4. தேவையற்ற கோபம் தவிர்க்க வேண்டும்.
5. நேரத்தை வீணடிக்க கூடாது.
6. தூய்மையாக இருக்க வேண்டும்.
7. லட்சியத்தை மனதில் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
8. நினைத்ததை உன்னால் செய்ய முடியும்.
9. டிவியை தவிர்பது நல்லது.
10. அசைவ உணவை நிறுத்தவேண்டும்.

Tuesday, December 23, 2008

வாழ்கைக்கு முக்கியம்

The following questions may help you in assessing your own self:¬
1. What do I wish to do in my leisure time?
2. What is the topic which I usually want to discuss with my friends and family members?
3. In which activities I am more interested?
4. Which areas of work would give me success to the maximum level?
5. Do I know about the various Career Options?
6. What are my weaknesses?
7. How can I overcome my weaknesses?8. What is my long term goal?
9. What is my immediate goal?
10. What actions I need to take to reach my goal?
11. When approximately shall I be able to reach my goal?
12. How can I maintain my confidence level?Write your responses on a sheet of paper. You need to have clear perception about yourself. Individuals differ in their characteristics, intelligence, apti-tudes, interests, and personality traits. Likewise occupations differ in their requirements. Self assessment is one step which helps an individual in the choice of a career. It is not the end of the career planning process. You have various options before you. You may consider them in the light of results of your self assessment process. Self assessment is not a one time process. It is a continuous process. Any wrong decision taken in a hurry may disturb your career. Think, analyse, discuss and then take a decision about your career keeping in mind values, interests & aptitudes and skills possessed by you.

Saturday, December 20, 2008

தத்துவங்கள்

"பிறருடைய வார்த்ததைகள் - உங்களது உற்சாகத்தை, உங்களுடைய முயற்சியை ஒருநாளும் குறைத்து விட முடியாது. நீங்கள் அனுமதித்தாலொழிய"....

***"எண்ணங்களில் வாழப்பார்க்கிறோம்.வார்த்தைகளில் தான் வாழ்கிறோம்.செயலில் அல்ல."
****"வாழ்க்கையின் எந்தத் துறையிலும், ஆன்மீகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும் - வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன." ------ (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
***"எண்ணங்களில் கவனமாக இருங்கள் -அது வார்த்தைகளாக வெளிப்படுபவை.வார்த்தைகளில் கவனமாக இருங்கள் -அது செயலாக வெளிப்படுபவை.செயல்களில் கவனமாக இருங்கள் -அது பழக்கமாக மாறுபவை.பழக்கங்களில் கவனமாக இருங்கள் -அது உங்கள் ஒழுக்கமாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள் -அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்."
*** "சொல்லுக்கும், செயலுக்கும் -நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்."
*** "பிறரது உதாசீனம் பிறரது அவமானச் சொல் -சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்."
***"அன்பான பதில் - கோபத்தை விரட்டி அடிக்கிறது.துக்ககரமான சொற்கள் - கோபத்தை உண்டாக்குகின்றன." ----- (சாலமன்)***
"சொற்கள் - பழைய அர்த்தங்களை இழந்து விடுவதே சமூதாயப் புரட்சியின் முதல் அறிகுறி." ----------(கிரேக்க வரலாற்று அறிஞர் துஸிடீடிஸ் 470 – 400 கி.மு)
*** "பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை மக்கட்பதடி" என்கிறார் வள்ளுவர்.
*** "மிகக் கடினமான பெரிய வார்த்தைகளைக் கொண்டுஅழகான பிரசங்கம் செய்து வருபவன் உண்மையில்உங்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை. அவன் தன் மேதாவித்தனத்தை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்." ------ (ஓ.மில்லர்)***
"கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவேஆறாது." ---- (ப்ராங்க்லின்)*** "மரணமும், வார்த்தைகளும், வரிகளும் - தவீர்க்க முடியாதவை." ---- (ஹாலிபர்ட்டன்)*** "பொய்யான சொற்கள் -தன்னுள்ளே கெடுதலை வைத்துக் கொண்டிருப்பதோடல்லாமல் அவைகள் ஆத்மாவையும் அதனோடு நோய்வாய்ப்படச் செய்கிறது." ----- (சாக்ரடீஸ்)*** "சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல.அந்தப் பொருளுக்கேற்ற வலிமையும் அதற்குள் இருக்கிறது" ------- (மகாத்மா காந்தி)***
"வார்த்தைகளில் - மென்மையும்,வாதத்தில் - அழுத்தமும் தேவை."*** "பாடலிலும், பேச்சிலும் சொற்கள் இருக்கின்றன.சொற்கள் எதைக் குறிக்கின்றனவோ அந்த வலிமை அந்தச் சொற்களுக்கு உண்டு. வலிமை என்ற சொல் திரும்பத் திரும்ப சொல்லப்படும் போது வலிமைதருகிறது. சோர்வு என்ற சொல் - சோர்வு தருகின்றது. இதில் சோர்வடையச் செய்யும் சொற்கள் மனிதசக்தியை வடித்துவிடுபவை."***
"மெழுகுவர்த்தி சிந்தனைகள் - தீப்பந்த வார்த்தைகள்."***
"மனிதனுடைய இதயக் குமறலே,அவனுடைய வார்த்தைகளாக வெளிப்படுகின்றன."***
"சொன்ன ஒரு சொல், விடுபட்ட அம்பு,கடந்து போன வாழ்க்கை,நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது." -------- (அராபிய நாட்டுப் பழமொழி)*** "கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும்,காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன." -------- (மனோதத்துவம்)***
"பிறருடைய வார்த்ததைகள் -உங்களது உற்சாகத்தை,உங்களுடைய முயற்சியைஒருநாளும் குறைத்து விட முடியாது.நீங்கள் அனுமதித்தாலொழிய."***
"சொற்களை -எண்ணிக்கை போடக்கூடாது.எடைதான் போட வேண்டும்."***
"சொற்கள் - தேனீக்களைப் போன்றது.அவைகளில் தேனும் உண்டு.கொடுக்கும் உண்டு."*** "மென்மையான ஒரு சொல்இதயவாசலைத் திறக்கிறது."*** "உணர்வதை நாம் செய்வோம்.சொல்வதை நாம் உணர்வோம்." ------- (செனிகா)***
"காலம் போகும்.வார்த்தை நிற்கும்."*** "அறிவுள்ள மனிதனுக்கு - ஒரு சொல் போதும்."*** "அம்புகள் - உடலை ஊடுருவித் தாக்கித் துளைக்கின்றன.கொடுஞ்சொற்கள் -ஆன்மாவை ஊடுருவித் தாக்கித் துளைக்கின்றன."***
"சுவாசிக்கும் எண்ணங்களே – எரியும் வார்த்தைகள்." ------ (கிரே)***
"குறைந்த வார்த்தைகள் -மேலான பிராத்தனையாகும்." -------- (லூதர்)***
"திரும்பத் திரும்பச் சொல்லும் வார்த்தைகள் -சுவையின்மையையும், சலிப்பும் ஏற்படுத்தும்." -------- (பாயிலே)***
"தீயைவிடக் கொடுமையானது – தீய சொல்."***
"தைரியமான சொற்கள் -மிகவும் தைரியம் நிறைந்த செயல்கள் -மனிதனை வீரனாக்கும்."*** "வார்த்தை ஒன்று தடை செய்யப்பட்டால்அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது.அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது.அந்த வார்த்தையில் விஷமேறிப் போகிறது." ---------- (லென்னி புரூஸ்)***
"வாழ்க்கையில் திரும்பப் பெற முடியாதவை –உயிரும், நேரமும், சொற்களும்."***
"சொல் வன்மைக்கு - மனத் தெளிவு அவசியம்.எந்த விஷயத்தின் நுட்பத்தையும், முழுத்திறமையையும் அலசி அறிந்து பகுத்தறிவோடு பிறருக்கு உண்மையைவிளக்கும் ஆற்றல் வேண்டும்." --------- (எமர்சன்)

புகழ்ச்சி

நம்மைப்பற்றிய நம் அபிப்பிராயத்தை விட நம்மைப்பற்றிய பிறர் அபிப்பிராயத்திற்கும், புகழ்ச்சியான வார்த்தைகளுக்கும், எப்போது முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கின்றோமோ அப்போதே நாம் மனத்தளவில் நம்மை தாழ்த்திக் கொள்ள துவங்கி விட்டோம். பிறரின் அபிப்பிராயங்களும், பாராட்டுக்களும், புகழும், எப்போதும் நிரந்தரமல்ல. இப்படிப்பட்ட வசியப் பேச்சுக்கள் கேட்பவருக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.நம்மைப்பற்றி பிறர் கூறும் புகழுரைகளையும் நாம் பொருட்படுத்தக்கூடாது. இகழுரைகளையும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. பொருந்தாத புகழுரைகளை ஏற்றுக் கொள்வதில் எவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறதோ அவ்வளவு ஆபத்து நமக்குப் பொருந்தாத இகழுரைகளை ஏற்றுக் கொள்வதிலும் இருக்கிறது. புகழுரைகள் முதலில் நமக்கு போலி மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் உண்டாக்கி பிறகு இழிவு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகின்றன.திருந்துகின்ற நோக்கத்தோடு குறைகளைச் சுட்டிக் காட்டுகிறவர்களின் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமானவை. இவற்றை அலட்சியப்படுத்துவதும்தவறு. குறைகளையே கண்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் மனப்போக்கு வேறு. இது வேறு. குறைக் காண்பவர்கள் பிறர் குறைகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலமே தாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்று மனச்செருக்கு கொள்ளும் விநோதப் போக்கு உள்ளவர்கள். பிறரின் செயலாற்றலைக் கண்டு பொறாமைப்பட்டு அதனை பழிக்கும் தவறான போக்கு உள்ளவர்கள்.ஆக்க சிந்தனைகளில் ஈடுபடும் போதும் செயல்களிலே கவனம் செலுத்தும் போதும் இப்படிப்பட்டவர்களை ஒதுக்கியே வைத்திருக்க வேண்டும்.நேரில் இருக்கும் போது ஒருவனைப் புகழ்ந்து பேசிவிட்டு பின்னால்இகழ்ந்து பேசும் இருமுகம் கொண்ட மனிதரா நாம்? வலியச் சென்று அவதூறு பேச்சிக்களை பேசுவதற்கு என்ன காரணம்? முரண்பாடான கருத்துக்களை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இப்படியே மற்றவர்களை அவதூறாக பேசிக் கொண்டிருப்பதால் நமக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா? "நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்" என்கிறார் வள்ளுவர்.எதிலும் தன்னை இழக்காமல் விஷயங்களைக் கணிக்கும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும் என வள்ளுவர் சொல்கிறார். அந்த மனோபலம் வேண்டும் நமக்கு. பிரச்சனைகள் வந்து மோதினாலும் பிறர் இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் உள்மனம் சலனமற்று இருக்கும் தன்மைக்குப் பெயர் தான் மனோபலம்.ஆனால் மனிதனின் முதல் பலவீனமே புகழ்ச்சிக்கு மயங்குவதாகவே இருக்கிறது. புகழ்ச்சி என்பது வெறும் அலங்கார வார்த்தைகளால் ஆனது. உண்மைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.புகழ்ச்சி பற்றி அறிஞர் சொன்ன கருத்துக்களை பார்ப்போம்!• - புரியாத விஷயத்தைப் புகழ்வது தவறு.இகழ்ந்து பேசுவதோ அதைவிடப் பெரிய தவறு. –(லியோனார் டோடாவின்ஸி)• - எதிர்த்து பேசினால் சுடச்சுட பதில் கொடுத்து விட முடியும்.புகழ்ந்து பேச ஆரம்பிப்பவனை அப்புறப்படுத்துவது கடினமான காரியம்.(கண்ணதாசன்)• - ஒருவனைப் புகழ்ந்து கொண்டே கவிழ்க்கும் அற்பர்களை விட - குறைக்கூறிக் கொண்டே மறைமுகமாக அவன் உயரக் காரணமாகும் மனிதர்கள் எவ்வளவோ மேல்.• - தன் புகழ் பற்றி ஒருவள் பேசக் கூடாது.தன்னிடம் இருக்கும் அதிகாரத்தைப் பற்றி ஓருவன் பேசக் கூடாது.தன்னிடம் இருக்கும் செல்வத்தைப் பற்றி ஒருவன் பேசக் கூடாது.மற்றவர்கள் சொன்ன இரகசியங்களைப் பற்றி ஒருவன் பேசக் கூடாது.(புராணங்களிலிருந்து..)• - ஒவ்வொருவனையும் புகழ்ந்து புகழ்ந்து பேசு.நீ புகழ்ந்த பிறகும் யார் யார் உன்னை இகழ்ந்து பேசுகிறார்களோஅவர்களை உன்பட்டியலில் இருந்து ஒதுக்கிக் கொண்டே வா.மிஞ்சுகிறவர்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்.(கண்ணதாசன்)• - மற்றொருவன் உன்னைப் புகழட்டும்.உன்னை உன் வாயால் புகழாதே.• - முன்னின்று புகழ்ந்து பேசுபவனும்,பின்னாலிருந்து கிண்டிவிடுபவனும் ஒரே தன்மையினர் தான்.• - பிறரால் புகழப்பட வேண்டும் என்று வாதப்பிரதிவாதம் செய்பவன்தான் தன்னைப் பற்றி தாழ்ந்த அபிப்பிராயம் கொண்டிருக்கிறான். பிறரால் புகழப்பட வேண்டும் என்ற ஏக்கத்தில் பிறரை எதிர்பார்க்கிறான்.• - ஒருவனை புகழ்ந்து கூறும் போது அவன் எப்படி நடந்து கொள்ளுகிறான்என்பதைப் பார்த்து அவனை நாம் சரியாக மதிப்பிட்டு விட முடியும்.(ஸெனேகா)• - புகழ்ச்சியான சொல்லுக்கு அடிப்பணியாதே.இகழ்ச்சியான சொல்லுக்கு கலங்காதே.• - நம்மைப் புகழ்ந்து பேசிவருகவர்களிடம் நாம் மிகவும் ஜாக்கிரதையாகஇருக்க வேண்டும். மற்றவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காகநம்மை பயன்படுத்திக் கொள்ள நம்மைப் புகழ்ந்து பேசிவரக் கூடும்.(ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)• - தற்புகழ்ச்சி சிறுமையில் தெரியும்.ஈனர் உறவு இறுதியில் தெரியும்.• - புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்து இல்லாதது. – (எமர்சன்)• - டூவே என்ற அமெரிக்க அறிஞர் சொல்கிறார்:நீ யாரைப் புகழ்கிறாய் என்று சொல். உன் இயல்பை நான் சொல்கிறேன்.இழிவான மனிதர்களைப் புகழ்ந்தால் உன்னுடைய சுபாவமும் இழிவானதே.பணக்காரனைப் புகழ்ந்தால் நீ இவ்வுலகத்திற்கு உரியவனாகிறாய்.பட்டம் பெற்றவர்களைப் புகழ்ந்தால் நீ முகஸ்துதி பேசுகிறவனாகிறாய்.யோக்கியமும், தைரியமும் ஆண்மையும் உள்ளவர்களைப் புகழ்ந்தால்நீயும் யோக்கியமும், தைரியமும், ஆண்மையும் உள்ளவனாகிறாய்.• - புகழ் மொழிகளின் மதிப்பு அதை பேசுபர் கையாளும் முறையைப்பொறுத்ததாகும். ஒருவன் கூறினால் புகழுரையாகத் தோன்றுவதுமற்றொருவன் கூறும் பொழுது இகழுரையாகவும் தோன்றக் கூடும்.( மாஸன் - 1725 -1797)• - தகுதியில்லாத புகழுரை மாறு வேஷம் போட்ட பழியாகும்.(போப் 1688 -1744)• - புகழையும், புகழ்ச்சியையும் வெறுக்கத் தெரிந்துக் கொள். காரணம்தீமையை வளர்ப்பது புகழ்மொழிகளே. – (ஜான் கேய். 1685 -1732)• - நாம் எக்காணைத்தை முன்னிட்டும் தற்புகழ்ச்சியில் ஈடுபடக் கூடாது.மற்றவர்களின் அறியாமையைச் சுட்டிக் காட்டி நையாண்டி செய்யக் கூடாது.நாம் பிறருக்குச் செய்துள்ள உதவிகளை எடுத்து எடுத்துப் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அதேப்போல் பிறரை இழிவாகப் பேசுவதிலும்நாம் மகிழ்ச்சி அடையக் கூடாது.

Friday, December 19, 2008

ஆண்களுக்கு மட்டும்

ஆண்களும் அழகு செய்து கொள்ளலாமே!
மேலை நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் ஆண்கள் அழகு நிலையங்கள் பெருகி வருகின்றன. பெண்கள் மட்டுமல்லாமல் தாங்களும் அழகை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று பரவலாக ஆண்களிடம் தோன்றியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயமாகும்.
மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதுபோல, மணமகனுக்கும் இந்நாளில் அலங்காரம் செய்கிறார்கள். பெண்ணைப் போல் ஆண்களுக்கு நகைகளோ, அதிக மேக்கப்போ வேண்டியதில்லை. பிளீச்சிங், ஃபேஷியல், தலைமுடி, மீசை ஆகியவற்றை ‘டிரிம்’ செய்தல், கால்களைச் சுத்தம் செய்யும் பெடிக்யூர் போன்ற பயிற்சிகள் செய்தல், தலைமுடியை ‘ஷாம்பூ’ இட்டு முடியை அவரவர் முகத்திற்கேற்றவாறு ‘செட்’ செய்தல் ஆகியவற்றோடு லேசாக மேக்கப் இட்டுத் தயார் செய்துவிடுகிறார்கள்.
இன்று பெண்களைப் போல் ஆண்களும் மாதம் ஒருமுறை அழகு நிலையங்களுக்குச் சென்று வருகிறார்கள்.
அழகான உடலும் அமைதியான உள்ளமும் அளித்திடும் யோகாசனம்
யோகாசனப் பயிற்சிகளும், ‘மெடிட்டேஷன்’ எனப்படும் ஆழ்நிலை தியானமும் மனத்தை மட்டும் அமைதிப்படுத்துவதோடல்லாமல் உடலழகையும் பாதுகாக்கின்றன. அவை உடலின் உள்ளுறுப்புகளையும் பலப்படுத்திச் சரிவர இயக்குகின்றன. உடலும் மனமும் என்றும் இளமையோடும் இருக்கவும் முடிகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ‘யோகாசனம்’ ஒரு வரப்பிரசாதமாகும்.
சிலு முக்கிய ஆசனங்களையும் அவற்றால் ஏற்படும் பலன்களையும் கீழே காண்போம்.
பத்மாசனம்:நேராக நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து, இடக்காலை வலத்தொடையின் மீது, வலக்காலை இடத்தொடையின் மீதும் வைத்து, நேராக நிமிர்ந்து உட்காரவும், பத்மாசனத்தில் தினம் உட்கார்ந்து பழகினால் எளிதாகிவிடும். இதனால் கூன் முதுகு நேராகும். இடுப்பு நோய் தீர்ந்து, புத்திக்கூர்மை உண்டாகும். முழங்கால்களில் ஏற்படும் வலி தீரும்.
பஸ்ச்சிமோத்தாசனம்:இருகால்களையும் நீட்டி நேராக உட்கார்ந்து இரு கைகளையும் மேலே உயர்த்த வேண்டும். பின் மெதுவாக மூச்சை இழுத்து, மெதுவாக மூச்சை விட்டுக் கொண்டே கை விரல்களால் கால் கட்டை விரல்களைத் தொட வேண்டும். இந்த ஆசனம் செய்யும்போது, வயிற்றைச் சற்று உள்ளுக்கிழுத்து முன்புறமாய்க் குனிந்து, இரு கால்களின் கட்டை விரல்களைச் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். முழங்காலை மடக்க வேண்டாம். முழங்காலில் தலைபடுமாறு இருத்தல் நலம். இம்மாதிரி 3 நிமிடங்கள் இருக்கலாம். வயிற்றிலுள்ள அதிகப்படியாக சதைகள் குறைக்கப்பட்டு வயிறு, இடுப்புப் பகுதிகள் அழகாய்த் தோற்றமளிக்கும்.
தனுராசனம்:படுத்துக் கொண்டு இரு கால்களையும், முழங்கால்களுக்கு மேலுள்ள பாகத்தையும் மடித்து இருகைகளையும் நேராக நீட்டிக் கால்களின் மணிக்கட்டுகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும். மூச்சைப் பிடித்துக் தலையைத் தரையிலிருந்த தூக்கி நேராகப் பார்க்கவும். நிதானமாய் மூச்சு விடவும். இப்பயிற்சியை 5 தடவை செய்யலாம்.
அட்ரினல், தைராய்டு, பிட்யூட்டரி சம்பந்தப்பட்ட சுரப்பிகளைச் சரிவர இயங்கச் செய்யும் இந்த ஆசனம் புத்துணர்ச்சியைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றுக் கோளாறுகளை நீக்கி, நீரிழிவு நோயையும் குணமாக்கும்.
சிரசாசனம்:மிருதுவான போர்வையின் மேல் மெல்லிய மெத்தையை விரித்து, கைகளை ஆதரவாய் வைத்து, உடம்பைச் சிறிது சிறிதாக மேலே தூக்க வேண்டும். இடுப்புவரை உயர்த்தி பின், கால்களை மேலே உயரத்தூக்க வேண்டும். 15 செகண்டுகள் இந்த ஆசனத்தில் இருக்கலாம்.மூளையைச் சுறுசுறுப்பாக்கக் கூடியதும் மனத்திலே தெளிவையும், அமைதியையும் ஏற்படுத்தக்கூடியதுமான இந்த ஆசனத்தை இருதய நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்யக் கூடாது.
சக்ராசனம்:உடம்பின் முழுப் பாரத்தையும் கைகள் மேலும், கால்கள் மேலும் வைத்து, இடுப்பு, வயிறு ஆகியவற்றை வளைத்துக் கைகளைத் தரையில் ஊன்ற வேண்டும். உள்ளங்கால்கள் தரையில் நன்கு ஊன்றப்பட்டிருக்க வேண்டும். மெதுவாகச் சுவாசம் செய்து முடித்துப் பழைய நிலைக்கு வரவும்.
இதனால் கண் பார்வை நன்கு தெரியும். உடலுக்கும், சருமப் பளபளப்பிற்கும் ஏற்ற ஆசனம்; இது மூச்சுவிட முடியாமல் இருப்பவர்களுக்கு ஏற்ற ஆசனம்.
வஜ்ராசனம்:இருகால்களையும் மடக்கி உட்கார்ந்து, பின்புறங்கள் இருகுதிகால்களின் மேல் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் மூன்று முதல் 5 நிமிடம் வரை இருக்கலாம்.
இதன் மூலம் வயிற்றுக்கோளாறு, ஜீரணக் கோளாறு ஆகியன சரியாகும். முதுகுத் தண்டுவடம் பலப்படும். அஜீரணம் ஏற்படும் போது இந்த ஆசனத்தைச் செய்வது நல்லது.
விபரீத கரணி:நேராகப் படுத்து, கால்களிரண்டையும் 90 டிகிரிக்கு நேர் மேலாக மெதுவாக நேரே உயர்த்த வேண்டும். உயர்த்தும்போது, மூச்சை இழுத்து விட்டுக் கொண்டே இரண்டு கைகளால் பக்கவாட்டில் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இம்மாதிரி 10 தடவை செய்யலாம்.
இந்த ஆசனம் மூலம் இடுப்பு, வயிறு, பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கலாம்.
அழகுக்கூடும்..

சில டிப்ஸ்

ஆரோக்கியமாக வாழ……
வெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப் போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை’ அடிக்கடி முகத்தில் தெளித்துக் கொண்டால் முகம் ‘பளிச்’சென இருக்கும்.
அடிக்கடி கை, கால்களை நீரில் நனைப்பது நல்லதல்ல. கையுறை, கால் உறைகளை அணிவது நல்லது. அல்லது வேலை செய்யும்போது அடிக்கடி கழுவாமல் துடைத்துக் கொள்ளலாம்.
நெயில்பாலிஷ் ரிமூவரை அடிக்கடி உபயோகித்தால நகங்களுக்கு கெடுதல் ஏற்படும். நகங்கள் நன்கு வளர ‘ஜெலட்டின்’ தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவும். வாரம் ஒரு முறை எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து, பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடும்.
நண்பரையோ, உறவனிர்களையோ கேட்டு எந்த மருந்தும் உட்கொள்ளாதீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
உணவு உண்டபின் எந்தக் காரணத்தைக் கொண்டும் உட்கார்ந்து கொள்வதோ படுத்துக் கொள்வதோ உடலுக்குப் பின்புறம் பருமனை அதிகப்படுத்தும்.
உடலில் எந்த ஒரு பாகத்திலாவது சுளுக்கு, வலி, வீக்கம் ஆகியன ஏற்பட்டால், பூண்டை உரித்து, அதன் சாற்றைத் தேங்காய் எண்ணையுடன் கலந்து நன்கு தேய்த்தால் மேற்குறித்தவை நீங்கும்.
இரவில் நன்கு உறக்கம் வராவிட்டால் அதற்காக மாத்திரை ஏதும் சாப்பிட வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு அரை டம்ளர் சூடான பால் அருந்தினால் உறக்கம் நிச்சயம்.
மஞ்சளைக் சூடாக்கி, பவுடராகக் செய்து கொண்டு அதை உப்புடன் சேர்த்துத் தினமும் பற்களைக் துலக்கின் வாய் துர்நாற்றம் மறையும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் ‘டின்’னில் அடைக்கப்பட்ட உணவுகள், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள், உலர்ந்த வகைகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட டிரிங்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
உணவு உண்ணும்போது மெதுவாக, அவசரம் இல்லாமல் சாப்பிட்டால் நல்லது. உப்பைக் குறைத்துக் கொள்வதன் மூலம் பருமனையும் குறைக்க முடியும்.
காலை உணவைத் தவிர்க்காதீர்கள். காலை வேலைகளைத் தொடங்குவதற்கு முன், ஏதாவது காலை உணவு சாப்பிட்டால்தான் அன்று முழுவதும் வேலை செய்ய சக்தி உண்டாகும்.
வீட்டில் குனிந்து, நிமிர்ந்து செய்யும் வேலைகளை வலியச் செய்யும்போது, உடலுக்கு வடிவம் கிடைக்கும்.
எலுமிச்சம் பழத்தில் ஒரு பாதியை முகம் முழுவதும் தேய்த்துவிட்டு, சற்று நேரம் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய்ப் பசையுள்ள முகம் உலர்ந்து பளீரென இருக்கும்.
வீட்டிலேயே பின் வருமாறு ‘பிளீச்சிங்’ செய்து கொள்ளலாம். பாலேட்டையும், எலுமிச்சம் பழ ஜூஸையும் கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இம்மாதிரி தினமும் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்.
வெயிலில் அலைந்ததால் ஏற்படும் கருமையைப் போக்க எலுமிச்சம் பழ ஜூஸில் ரோஸ் வாட்டர் கலந்து கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவலாம்.
குளிர்காலத்தில் சருமம் உலர்ந்து காணப்படும். இதைப் போக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைக் குழைத்து உபயோகிக்கலாம்.
முகத்திலுள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் தேனில், காரட் ஜூஸை கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.
முகத்திலுள்ள தழும்புகளை மறைக்க, சருமத்திற்கேற்றவாறு ஃபவுண்டேஷனை உபயோகிக்கலாம்.
களைப்பாயிருக்கும் போதும், வெயிலில் அலைந்து வந்தவுடனும் உணவு உட்கொள்ள வேண்டாம்.
உதடுகள் வெடித்திருந்தால், ‘பெட்ரோலியம் ஜெல்லி’யை உதடுகளில் இலேசாக மசாஜ் செய்யவும்.
பாலீஷ் போட்டதும், விரைவில் காய்வதற்கு, ஐஸ் வாட்டரில் நகங்களை வைத்தால் உங்கள் நெயில் பாலீஷ் சீக்கிரம் உலரும்.
அடிக்கடி டென்ஷன் ஆகாமல், எதையும் ‘ஈஸி’யாக எடுத்துக் கொள்வது நல்லது. டென்ஷன் அதிகமானால், உடல் அசதி, மனச்சோர்வு படப்படப்பு, பசியின்மை, கண்ணுக்குக் கீழே கருவளையங்கள், குடற்புண்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு.
அழகுக்கூடும்…

அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்

  1. நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே?
    அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள் தருவது நல்லதென்று கருதுகிறேன்.
    காலை உணவைத் தவிர்க்காதீர்!

    பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

    இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

    காபி, டீ குறையுங்கள்!
    காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.
    வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்
    வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

    இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்
    டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.
    உடற்பயிற்சி
    அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!
    அழகுக்கூடும்…

Thursday, December 18, 2008

சோர்வை விரட்ட இதோ tips

சோர்வை விரட்ட…
வாழ்க்கை மிகவும் வெறுப்பாக இருக்கிறதா? மிகவும் சோர்ந்து போய் விட்டீர்களா? சில எளிய வழிகளால் மீண்டும் உங்களை பழைய நிலைக்கு உற்சாகமுள்ளவராக புதுப்பித்துக் கொள்ள முடியும்.
1. முதலில் உங்களுக்கு இதுவரை வந்த பாராட்டு, ஊக்கம் முதலியவற்றை நினைத்துப் பாருங்கள். பிறகு, நீங்கள் பாராட்ட நினைக்கிறவர்களுக்கு பாராட்டுக் கடிதம் எழுதுங்கள். நன்றிக் கடிதம் எழுதுங்கள். நீங்கள் அன்று சொன்ன ஒரு சொல், அல்லது உங்களின் போன வருடக்கடிதம் எனக்கு ஊக்கத்தை புதுப்பித்துள்ளது, நன்றி என்று கூறி எழுதிப்பாருங்கள், போனிலும், நேரிலும் சொல்லத் தயங்கும் பாராட்டு, நன்றி முதலியவற்றை கடிதங்கள் மூலம் எளிதில் சொல்லமுடியும்.
2. உடம்பை ஒருமுறை நன்கு குலுக்குங்கள். அல்லது ஒரு ஐந்து நிமிடங்கள் ஆடுங்கள். உங்கள் சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
3. ஐந்து நிமிடங்கள் வாய்விட்டுச் சிரியுங்கள். நகைச்சுவைக் கட்டுரை படிக்கலாம். அல்லது நகைச்சுவைக் காட்சிகளை டி.வி.யில் அரைமணி நேரம் பாருங்கள். மன இறுக்கம் உடனே அகலும்.
4. ஒரு தலையணையை தலைக்கு வைத்துக்கொண்டு நீட்டிப்படுங்கள். இரண்டு கைகளையும் தொப்புளில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு உள்ளே சென்று வெளியே வருவதை கற்பனையில் பாருங்கள். பிறகு கால்களை படுத்த நிலையிலேயே உயரத்தில் தூக்குங்கள். பிறகு கால் பாதங்கள் தரையில் தொட்டுக் கொண்டிருக்க இடுப்பையும், முழங்கால்கலையும் முன்னோக்கித் தூக்குங்கள். இந்த பயிற்சியை தினமும் 5 நிமிடங்கள் அல்லது 10 நிமிடங்கள் செய்தால் உங்களின் சக்தி அதிகரிக்கும்.
5. எப்போதும் தைரியமாக வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள். நமது மாபெரும் பயங்களை வெல்லக்கூடிய ஒரே மாற்று மருந்து, நச்சு முறிவு மருந்து தைரியமான எண்ணங்களும், செயல்களும்தான், தைரியமான செயல் முறையால் மிகப்பெரிய சக்தி நம்முள் எழுகிறது. இதுவே படைக்கும் திறன், உடல் உறுதி, சமாளித்து வெற்றிபெற தேவையான ஆற்றல் முதலியவற்றைத் தந்து நம்மை உயர்த்துகிறது.
6. வேலை செய்யப் பிடிக்காதபோது, பதட்டமாக உள்ளபோதும் மூச்சை நன்கு இழுத்து விடுங்கள். இந்த மூச்சுப் பயிற்சியால் வெறுமை நிலை ஏற்படாது. மன அமைதி கிடைக்கும்.
7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உங்கள் சக்திக்கு உட்பட்ட சிறு சிறு பரிசுப் பொருள், வாழ்த்து அட்டை போன்றவற்றை அனுப்புங்கள். அவர்கள் காட்டும் பிரதிபலிப்பில் குதூகலிப்பீர்கள். இது உறுதி.
8. பாதிப்பாதியாக நிறைய வேலைகள் அப்படியே உள்ளனவா? முடிக்காத வேலைகளைப் பட்டியல் எடுத்து ஒவ்வொன்றாக முடியுங்கள். இந்த ஒழுங்கு முறையை வீட்டிலும் அலுவலகத்திலும் பின்பற்றினால் உங்கள் மீது உங்களுக்கு சுயமரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் அடுத்ததைச் சந்திக்க உற்சாகமாக இருக்கும்.
9. உங்கள் உடைகளில் மாற்றம், முடிவெட்டிக் கொள்வதில் மாற்றம், வாரம் ஒரு முறை, அருகில் உள்ள இதுவரை செல்லாத ஊர்களுக்குச் சென்று வருதல் என்று உங்கள் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். உடை அணிவதில் காட்டும் இந்த மாற்றம் உங்களுக்கு அளவற்ற உற்சாகத்தைத் தரும். சுத்தமான ஆடைகளையே தினமும் அணியுங்கள்.
10. உங்களுக்கு மிகவும் பிடித்தமான மூன்று பொருள்களைக் குறிப்பிடுங்கள். எந்த மூன்றைக் கண்டு வெறுக்கிறீர்கள்! சிறந்த மூன்றிலிருந்து நீங்கள் உலகிற்கு கொடுத்த சிறப்பு எது? பதிலை எழுதுங்கள். வெறுக்கின்ற மூன்று அம்சங்களில் உங்களின் பயங்களும் அறியாமையுமே முதலிடத்தில் இருக்கும். எனவே, பயப்படாமல் அறிவுடன் வாழ முடிவு செய்யுங்கள்.
11. உங்களது வாழ்க்கை முறை, சத்துணவு முதலியவற்றை நன்கு ஆராயுங்கள். உங்கள் பணி, உடல் நலன் முதலியவற்றிற்கு ஏற்ப சத்துணவுத் திட்டம் தயார்படுத்தி பின்பற்றுங்கள்.
12. உங்கள் உடல்நலமும், செல்வ வளமும் நன்கு இருப்பதைக் கற்பனையில் சதா பாருங்கள். உங்கள் உருவத்தை வெற்றிகரமான, ஆரோக்கியமான மனிதராகவே பாருங்கள். பொட்டாசியம், மக்னீஷியம் உள்ள பழங்களையும், பருப்பு வகைகளையும் நன்கு சேர்த்துவந்தால் நரம்பு மண்டலம் துடிப்பாகவும் அமைதியாகவும் இருந்து, சுறுசுறுப்பான வாழ்க்கையை உங்களுக்கு உருவாக்கித்தரும். வாழ்வில் சோர்வு தலைகாட்டாது.
சோர்வை நீக்கும் உணவு வகைகள்:
சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதில் சோளம், புரதம் நன்கு உள்ள உருளைக்கிழங்கு, அதிக நேரம் மன உளைச்சலுடன் வேலை பார்க்க நேரிட்டாலும் இதயம் சிறப்பாக இயங்க ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ், சப்பாத்தி, கொண்டைக்கடலை முதலியவைகளில் உள்ள தயாமின் என்ற வைட்டமின், ஆக்ஸிஜனை உடலின் அனைத்துச் செல்களுக்கும் அனுப்ப பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலியவைகளில் உள்ள இரும்புச்சத்து தாராளமாக உதவும். இந்த உணவுகள் அடிக்கடி உங்கள் உணவில் இடம் பெற்றால் மனமும் உடலும் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
தொடரும்

யோசனைகள்

ஆறு யோசனைகள்
மன்னிப்பது நல்லது!
பிறரைக் குறை கூறிக்கொண்டோ அல்லது திட்டிக் கொண்டே தங்கள் வேலைகளை நாள் முழுவதும் சிலர் பார்ப்பார்கள். இவர்களுக்கு வயிறு சம்பந்தமான கோளாறுகள் வரும். இந்தக் கோளாறு இருந்தால் உங்களுக்குக் கெடுதல் செய்தவர்களை உடனடியாக மனப்பூர்வமாக மன்னித்து மறந்துவிடுங்கள். மருந்து இன்றியே வயிற்றுக் கோளாறுகள் இதனால் விரைந்து குணமாகும் நம்புங்கள்.
வாந்தி வருவது போல் இருந்தால்…
வயிற்றுக் கோளாறுகளை முன்கூட்டியே தடுக்க ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகும் உலராத ஓர் இஞ்சித்துண்டு சாப்பிடவும். இதே போல வாந்தி வருவதை நிறுத்த, உலர்ந்த சிறிய இஞ்சித்துண்டை உப்புடன் சாப்பிடவும். எப்படிப்பட்ட வாந்தியும் உடனே அமைதியாகி ஓயும்.
உடல் நாற்றம் நீங்க…
மழைக்காலத்தில் வேப்ப இலையை அரைத்து இரண்டு டீஸ்பூன் அளவு அந்தத் துவையலை குளிக்கும் தண்ணீரில் கலக்கிவிட்டுக் குளிக்கவும். இது உடல் நாற்றத்தைப் போக்கும் (வேப்ப எண்ணெய்தான் நாறும்). தோலில் எரிச்சல் குணமாகும். வீட்டில் பூச்சிகள் இருந்தால் அது உங்களைக் கடிக்காது.
விரல் சுட்டுவிட்டால்!
சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து இறக்கும்போது விரல்கள் சுட்டுவிட்டால் ஐஸ் துண்டுகளை அந்த இடத்தில் வைக்கவும். இதனால் கொப்பளமும் வராது. ரெப்ரிஜிரேட்டர் இல்லாதவர்கள் உடனடியாகப் பக்கத்து வீட்டிலாவது ஐஸ் துண்டுகளைப் பெறுவது நல்லது.
திரைப்படப் பாடல்களால் உடல் நலம் உண்டு!
நல்ல உடல் நலம், நல்ல மனவளம், ஆழ்ந்த அமைதி, எளிதில் ஓய்வு எடுக்க, ஆழ்ந்த தியானம் செய்ய, படுத்து உடனே தூங்க 1,250 ரூபாயில் ஒரு காம்பாக்ட் டிஸ்க் வந்துள்ளது. இதில் கர்நாடக இசைதான் உள்ளது. ஆன்ட்ருவெல் என்பவர் ஆராய்ந்து ஒலிப்பதிவு செய்த இசைத்தொகுப்பு இது.
மறதி வியாதி மறைய…வயதானவர்களுக்கு வரும் மறதியிலிருந்து விடுபடத் தினமும் வைட்டமின் ‘ஈ’ மாத்திரையைச் சாப்பிட வேண்டும். அளவு : 2000 சர்வதேச யூனிட்டுகள். சற்று அதிகமாகச் சாப்பிட்டாலும் கெடுதல் இல்லையாம். ஆனால், டாக்டர்தான் மாத்திரை அளவை முடிவு செய்ய வேண்டும். அமெரிக்காவில் உள்ள தேசிய முதியோர் நல அமைப்பினர் இரண்டு ஆண்டுகளாக இதே அளவு கொடுத்துவந்தால் பல ஞாபக மறதி நோய்க்காரர்கள் நன்கு குணம் பெற்றனர்.
வாழ நினைத்தால் வாழ முடியும்!
குண்டு பாய்ந்தும் 76 வயது வரை நலமாக வாழ்ந்த மனிதர்!
1822ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள்… வில்லியம் ப்யூமண்ட் என்ற இயவயதுக் கனடா இராணுவ டாக்டருக்கு அவசரத் தொலைபேசி அழைப்பு.
18 வயதான அலெக்ஸிஸ் செயின்ட் மார்ட்டின் என்ற விலங்குகளின் தோல்களை விற்கும் வியாபாரி ஒருவர் மீது எதிர்பாராத விதமாகக் குண்டு பாய்ந்துவிட்டது என்ற தொலைபேசித் தகவலைத் தொடர்ந்து டாக்டர் ஓடினார்.
மக்கள் அதிகமுள்ள கடைவீதியில் சுடப்பட்ட இந்த வியாபாரி பிழைத்திருக்கவே முடியாது. காரணம், இடப்பக்கம் இடுப்பு எலும்புக்கு மேல் பெரிய அளவு ஓட்டை ஏற்பட்டு அந்த இடமே வெந்து கருகிக் காணப்பட்டது. டாக்டர் அந்த இடத்திலேயே இரத்தத்தைக் கொடுத்து, 36 மணி நேரத்திற்குள் வியாபாரி இறக்க நேரிடலாம் என்று கூறிவிட்டார்.
ஆனால், மார்ட்டின் பிழைத்து எழுந்தார்! ஓர் அங்குலம் அளவுக்கு இடுப்புக்குக் கீழ் அகலமான ஓட்டை ஆழத்தில் வயிற்றுத் தசையின் கடைப் பகுதியும் தெரிந்தது. 76 வயதுவரை இந்த ஓட்டையுடன் நலமாக வாழ்ந்தார். மிருகங்களை கண்ணி வைத்துப் பிடித்து தோல் வியாபாரமும் செய்தார்.
வயிற்றில் உள்ள ஓட்டையுடன் எப்படி நலமாக வாழ்ந்தார்? காய்ச்சல் என்று இவர் படுத்ததே இல்லை. மேலும், இவர் சாப்பிட்ட உணவும் எப்படி சரியாக ஜீரணமானது? முக்கியமாக பெரிய ஓட்டையுடன் காணப்பட்ட இவர், அடுத்த 58 ஆண்டுகள் வாழ்ந்தது எப்படி? அதிசயம்தான்!

மெடிக்கல் பட்ஜெட்

மருத்துவ பட்ஜெட்….
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் காய்ச்சலில் படுத்தவர்கள் கூட நன்கு தேறி வர நான்கைந்து நாட்கள் ஆகிவிடுகின்றன. இந்த நிலையில் நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவர், மாத்திரைகள் துணையுடன் சலிப்புடன் வாழ்கின்றனர்.
அடிக்கடி மாத்திரைகளிலும் மாற்று மருத்துவமுறைகளிலும் கவனத்தைச் செலுத்தாமல் உணவில் கவனத்தைச் செலுத்தினால் உடல் நலத்தை மிகுந்த சக்தியுடன் திரும்பவும் புதுப்பித்து விடலாம்.
உதாரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக உணவு கூடாது. எனவே, அவர்கள் உணவில் கவனத்தைச் செலுத்தும்போது உணவுகளையே மருந்தாகச் சாப்பிட்டு நோயைக் கட்டுப்படுத்தி வாழும் முறையைக் கையாள்கின்றனர். இதனால் மாத்திரைகளையும் குறைவாகச் சாப்பிட நேரிடுகிறது. ஆரோக்கியமும் நீடிக்கிறது.
இதே முறையை ஆரோக்கியமாக உள்ளவர்களும், தங்கள் நோய்க்குச் சிகிச்சை பெறுகிறவர்களும் பின்பற்றினால் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியம் புதுப்பிக்கப்பட்டு வாழ்நாளும் நீடிக்கும்.
கைக்குத்தல் அரிசி, கோதுமை உப்புமா, முளைவிட்ட கொண்டைக்கடலை, பாதாம் பருப்பு, வேர்க்கடலை, வால்நட் பருப்பு, பார்லி, வாழைப்பழம், உலர்ந்த திராட்சை, அன்னாசிப்பழம், சாத்துக்குடி, தேங்காய், பாகற்காய், அவரைக்காய், காரட், சோயா பீன்ஸ், பசலைக்கீரை, உருளைக்கிழங்கு இவை அனைத்தும் நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் பாதுகாக்கும் சூப்பர் உணவுகளாகும். இந்த உணவு வகைகளில் துத்தநாக உப்பு, பைரிடாக்ஸின் என்ற வைட்டமின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், கால்சியம், தொற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் வைட்டமின் சி ஆகியவை உண்டு. இது மட்டுமல்ல, கண்களில் உள்ள ரெட்டினாவிற்கு வைட்டமின் ஏ-யை விரைந்து அனுப்பும் வசதி, நோய் எதிர்ப்புப் பொருள்கள் தொடர்ந்து உற்பத்தி ஆகும் வசதி, கொலாஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் வசதி, மூளையும், நரம்பு மண்டலமும் சிறப்பாக இயங்க உதவும் சத்துணவு, இதயநோய், நீரிழிவு முதலிய முழுக்கட்டுப்பாட்டில் நீடிக்கும் வசதி, பற்சொத்தை வராமல் தடுப்பது, சோடியமும் பொட்டாசியமும் உடலில் போதுமான அளவு இருக்க உதவும் பைரிடாக்ஸின் செயல்முறை என அனைத்தும் இந்த சூப்பர் உணவு வகைகளில் உள்ளன.
மேற்கண்ட பட்டியலில் உள்ளபடி உணவுத்திட்டத்தைப் பின்பற்றினால் எளிமையாக ஒவ்வொரு செல்லும் புதுப்பிக்கப்படுகிறது. நோய்களும் மறைகின்றன.
காலையில் சாப்பிடும் முளைவிட்ட கொண்டைக்கடலையும், மதிய உணவில் சேரும் சோயா பீன்ஸும் அல்லது சோயா பாலும் இரத்தத்தை சுத்தப்படுத்திவிடுகின்றன. இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் முழுமையாகக் குறைந்து போகிறது.
உடல் பலவீனத்தையும், பித்தத்தையும் அன்னாசிச்சாறு குணமாக்குகிறது. குடலில் புழுக்கள் இல்லாமல் பாதுகாத்தும் வருகிறது. சாத்துக்குடியில் கால்சியம் நன்கு கிடைப்பதால் எலும்புகள் பலமடைந்து சுறுசுறுப்பைத் தினமும் பெற்றுக் கொள்ளலாம். அன்னாசிப் பழச்சாறு உடலில் விஷப்பொருள்கள் சேராமல், அவற்றை உடனுக்குடன் வெளியேற்றி விடுகிறது. தொற்று நோயாலும், திடீர் திடீர் என்று காய்ச்சல், உடம்பு வலி என்று அவதிப்படுகிறவர்களும் அன்னாசியையும், சாத்துக்குடியையும் அடிக்கடி சாப்பிடவும்.
நமக்குத் தெரியாத, டாக்டரின் பரிசோதனையில் உறுதி செய்ய முடியாத, நமக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களையும் கூட மேற்கண்ட உணவுகளில் உள்ள பயோட்டின், பைரிடாக்ஸின் போன்றவை குணப்படுத்தும். ஒற்றைத் தலைவலி அடிக்கடி வந்தால் மேற்கண்ட உணவு வகைகளின் மூலம் உடல்நலத்தைப் புதுப்பிப்பதில் கவனம் செலுத்தினால் போதும்.
வந்தபின் பெரும் பணம் செலவு செய்து குணப்படுத்துவதை விட முன்கூட்டியே இந்த சூப்பர் உணவுகளை கவனமாகச் சேர்த்து வந்தால் மருத்துவ பட்ஜெட் கீழே விழுந்துவிடும். இந்த சூப்பர் உணவு மருந்துகளால் பின்விளைவுகள் எதுவுமில்லை என்பதும் நீங்கள் அறிந்த செய்தி.
மனித உறுப்புகளில் முக்கியமான கல்லீரலை, செலினியல் உப்பு உள்ள முளைவிட்ட கோதுமை, பார்லி, ஓட்ஸ், டர்னிப் கீரை முதலியன முழுமையாகப் பாதுகாக்கும். விரைந்து குணமாகவும், எப்போதும் முழு உடல் நலப் பாதுகாப்புடன் வாழவும், கல்லீரல் எக்காரணம் கொண்டும் கெட்டுப் போகாமல் இருக்கவும் மேற்கண்ட நான்கு உணவு வகைகளில் இரண்டையாவது தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.
சிகரெட் புகைக்காமல் இருந்தால்….
சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் 24 மணி நேரத்தில் ஹார்ட் அட்டாக் அபாயம் முழுமையாகக் குறைகிறது. இரண்டு வாரம் புகைக்காமல் இருந்தால் இரத்த ஓட்டம் சீராகும். நடப்பதற்கு சிரமம் ஏற்படாது. நுரையீரல்களின் செயல்பாடு 30% அதிகரிக்கும். தெரு நாற்றம் மூக்கைத் துளைக்கும். உணவு ருசி நன்கு தெரியும். பசிப்பது அதிகரிக்கும். ஒரு மாதம் முதல் ஒன்பது மாதம் வரை புகைக்காமல் இருந்தால் மூச்சுவிடுதலில் உள்ள சிரமம் குறைந்துவிடும். இருமல், சைனஸ், சோம்பல் காணாமல் போயிருக்கும். ஒரு வருடம் புகைக்காமல் இருந்தால் இதயம் சம்பந்தமான நோய்களின் அபாயம் 50% குறைந்திருக்கும். புகைக்காத பழக்கம் தொடர்ந்தால் புற்று நோய் அபாயமே இல்லை. திடீர் ஹார்ட் அட்டாக் என்று பேச்சும் இல்லை. மன உறுதியுடன் ஒரு நாள் மட்டும் புகைக்காமல் இருந்துவிட்டால் எப்போதும் சிகரெட் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டார்கள்.

என் முதல் கவிதை

பெட்ரோல் குடித்தால் போதை வருமா ?

வரும் என்கிறது

சாலையில் தள்ளாடும் பேருந்து !!!

இளமை நீடிக்க இனிய விதிகள்

இளமை நீடிக்க ஏழு விதிகள் உள்ளன.
விதி 1 : உடல் நலனுக்குச் சரியான உணவும் போதுமான அளவு தண்ணீரும் தேவை. புரதம், மாவுச் சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, போதுமான நீர், வைட்டமின்கள், தாது உப்புக்குள் அடங்கிய சரிவிகித உணவுத் திட்டத்தை தயாரித்துப் பின்பற்ற வேண்டும்.
விதி 2 : நீங்கள் வாழும் இடங்களில் சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் நன்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உடலில் கழிவு சேராமல் பார்த்துக் கொள்ளவும். இரண்டு முறை ‘வெளியே’ போவது மிக நல்லது.
விதி 3 : அதிக உஷ்ணத்தாலும் அதிகமான குளிர்ச்சியாலும் உடல் பாதிக்கப்பட்டால் பாதுகாக்க வேண்டும். சூடுபடுத்தப்படாத இயல்பான நீரிலேயே குளிக்க வேண்டும். உணவு உண்ட பிறகு குளித்தால் ஜீரணக்கோளாறு உண்டாகலாம். உணவு சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். மாலையில் குளிப்பது நல்லது.
விதி 4 : முறையான உடல் பயிற்சியோ அல்லது துரித நடைப்பயிற்சியோ தினமும் தேவை. இத்துடன் போதிய அளவு ஓய்வும் தாம்பத்திய வாழ்வும் தேவை. யோகாசனம், நாடி சக்தி, பிராணயமும் (மூச்சுப் பயிற்சி) அவசியம் தேவை. சூழ்நிலை இடம் தந்தால் பகலில் அரைமணி தூங்கலாம். சராசரியாக தூக்க நேரம் குறைந்தால் உடலும் மனமும் பாதிக்கப்படும். இரவு அதிக நேரம் விழித்திருந்து வேலை பார்ப்பது உடல் நலனை மட்டுமல்ல, மனதையும் பாதிக்கும்.
விதி 5 : உடலுக்குக் கெடுதல் செய்யும் மது, புகை, புகையிலை போன்ற பழக்கங்கள் கூடா. இவற்றால் உடலுக்கு நச்சுத் தன்மை அதிகமாகி உயிரணுக்கள் செயலிழக்க ஆரம்பிக்கின்றன. முதுமைத் தோற்றமும் விரைந்து ஏற்படும். மனக்கவலையைப் போலவே உடலுக்கு கிழட்டுத் தோற்றத்தை இவை தருகின்றன.
விதி 6 : உடல் பருமன் அடைய விடக்கூடாது. மாவுப் பொருள்களை அதிகம் சேர்த்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன்தான் இதய நோய், மூட்டு வலி உட்பட பல நோய்களின் தந்தை. எனவே, உடல் பருமனாக ஆரம்பிக்கும் போது உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் அக்கறை முதலியன தொடர வேண்டும். முப்பது வயதுக்குப் பிறகு புரத உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் உடல் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் இரும்புச் சத்து, பி மற்றும் சி வகை வைட்டமின் மாத்திரைகளையும் சத்துணவுக் குறைபாட்டைச் சரி செய்யத் தினமும் சாப்பிட டாக்டரிடம் ஆலோசனைகளைப் பெறவும்.
விதி 7 : மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாவும் வைத்துக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கும், இளமை மாறாத தோற்றத்திற்கும் அவசியம்.
ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் உங்களின் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெற்றிகளை நினைத்துப் பார்ப்பதாலும் இளமைக்காலத் தோற்றத்தை மனக்காட்சிகளாக பார்ப்பதாலும், இளமை மாறாத தோற்றம் அமையும். சிறு வயதில் பள்ளி சென்ற அனுபவங்கள் அடிக்கடி மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் படமாகத் தெரிந்தால் உயிரணுக்கள் செயல் இழக்காமல் புதுப்பிக்கப்படும்.
மேலும் பிரார்த்தனை, தியானம், தொழுகை, புத்தகம் படித்தல், இசை கேட்டல், கடமையை முழு ஈடுபாட்டுடன் செய்தல் முதலியனவும் மனதுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கவல்லவை.
எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வும், நம்மிடம் கற்பனை வளமும் உள்ளன என்ற நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையாலும் உடல் நலன் பாதுகாப்பாக இருந்தும் நமது இளமைத் தோற்றத்தை நீடித்துத் தரும்.

வாழ் நாளை உயர்த்தும் உணவு பழக்கம்

ஒரு நல்ல சத்துணவு நிபுணர், சமச்சீர் உணவு என்றால் புரதமும் இரும்புச் சத்தும் உள்ள அசைவ உணவையும் சேர்த்துத்தான் சொல்லுவார். ஆனால், புலால் இல்லாத தாவர உணவுத் திட்டத்தைப பின்பற்றினால் அதில் ஏழு அற்புத நன்மைகள் உள்ளன என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
பிரிட்டீஷ் மருத்துவப் பத்திரிகை 39 வயது முதல் 60 வயது வரை உள்ள 6000 சைவ உணவுக்காரர்களையும், 5000 அசைவ உணவுக்காரர்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்தது. சைவ உணவுக்காரர்கள், 40க்கும் குறைவாகவே புற்றுநோயால் இறக்கும் அபாயம் இருந்தது.
மற்ற வியாதிகளால் இறக்கும் அபாயம் 20 தான் இருந்தது. அசைவ உணவுக்காரர்கள் உடலில் இறப்பு அபாயம் அதிகம் இருந்தது. கொலாஸ்டிரல், புற்றுநோய் அறிகுறிகள் பரவலாகக் காணப்பட்டன.
அசைவ உணவுக்காரர்களைவிட சைவ உணவுக்காரர்களின் உடலில் வளர்ச்சி மாற்றம் பதினோரு சதவிகிதம் மெதுவாக நடைபெறுகிறது. குறைந்த அளவு கலோரி உணவு என்பதால் செல்களும் அழியாமல் இருக்கின்றன. எனவே, காலையில் நம்பிக்கையுடன் எழும் உத்தரவாதம் உண்டு. அசைவ உணவு திடீர் ஸ்டிரைக் செய்து உடல் நலக்குறைவை ஏற்படுத்தும். ஆடு, மாடு, பன்றி முதலியவற்றில் அரைக்கிலோ கறி உருவாக 2500 கேலன் தண்ணீரும், 7-1/2 கிலோ தானியங்களும், விலங்குகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் பழங்கள், காய்கறிகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இவ்வளவு செலவுகள் இல்லை. சைவ உணவு மலிவானது. தினமும் அசைவம் சேர்த்துக்கொண்டால் உடல் நலம் கெடுவதுடன், ஏகப்பட்ட செலவு உணவிற்கே போய்விடும்.
கையில் மாத்திரை ரெடியாக வைத்திருக்க வேண்டாம். அடிக்கடி டாக்டரைச் சந்தித்து, புதிய மருந்துகள் எழுதி வாங்க வேண்டாம். புலால் உணவு பதப்படுத்தப்பட்டோ அல்லது உயிர்வாழ்வுக்கு ஊறு செய்கிற நன்மைக் கொல்லிகளை கொல்வதற்காகச் செய்கிற சில மருந்துகளைக் கலந்துதான் விநியோகிக்கப்படுகிறது. இந்த வகையில் பால் அருந்தும்போது கூட விஷ மருந்துகள் நம் உடலுக்குள் போய்விடுகின்றன. பழம், காய்கறிகளில் இப்படி இல்லை. காய்ச்சல் வருவதுபோல் இருந்தால் சாதாரணப் புடலங்காயைச் சாப்பிட்டால் போதும். இதில் எல்லாவகையான தாது உப்புக்களும் இருப்பதால் உடனடியாகக் காய்ச்சல் குறைகிறது. ஆக, சைவ உணவு என்பது மருந்தைப் போல் செயல்படுகிறது.
துரித உணவகங்களில் விற்கப்படும் அசைவ உணவுவகைகளைச் சாப்பிட்டுவிட்டு வந்தவர்களிடம் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களின் ஞாபகசக்தி, புலன் உணர்வு, உள்ளத்தில் எச்சரிக்கை முதலியன மிகவும் சராசரியாக இருந்தன. சுற்றுப்புற ஆரோக்கியம் என்ற இதழில் இந்த உண்மை வெளியானது. ஆராய்ச்சியாளர்கள், அசைவ உணவுகளில் போரன் என்ற உப்பு இல்லாததால் தான் இப்படி அசட்டையாக உள்ளனர் என்று கண்டுபிடித்தனர். தக்காளி, பேரிக்காய், வேர்க்கடலை போன்றவற்றில் இந்த உப்பு இருக்கிறது. பழங்கள், காய்கறிகளிலும் இந்த உப்பு ஓரளவு கிடைப்பதால் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் புலால் உண்ணாத சைவ உணவுக்காரர்கள்.
கொழுப்பு அதகிம் கொண்ட விலங்குகளைச் சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது. மந்தப் புத்தியும் இயலாமையும் சேர்ந்து கொள்கின்றன. இரத்தக் குழாய்களில் தடை ஏற்படுகிறது. தாம்பத்திய வாழ்வில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் ஆர்வமாக வாழக் கீரைகளில் உள்ள இரும்புச் சத்தும், வைட்டமின் ‘சி’யும் உதவுகின்றன. இதனால் எல்லா உறுப்புகளுக்கும் இரத்தமும், ஆக்ஸிஜனும் நன்கு செயல்படுகிறது. ஆண்மைக்குறைவு, இருதய அடைப்பு முதலியன ஏற்பட வாய்ப்பில்லை. இந்த நன்மைகள் பழங்கள், காய்கறிகளில்தான் தாராளமாகக்க கிடைக்கின்றன.
நாக்கு ருசியால் உடல் கொழுப்பதுண்டு. உடல் வேகமாகக் கொழுத்த, பருத்த உடலாக மாற அசைவ உணவு காரணமாகிறது. ஆனால், சைவ உணவில் உள்ள கொண்டைக்கடலை, சோளம் போன்ற தானியம் மற்றும் பருப்பு வகைகள்கூட இரத்தக் கொதிப்பு, உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்கின்றன. இவற்றில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை இரத்தக்கொதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன. தேங்காய், சோளம் முதலியவற்றில் உள்ள துத்தநாக உப்பு உடலைக் கொழுக்கவிடாமல் இராணுவக் கட்டுப்பாட்டுன் பாதுகாக்கிறது. இதுபோன்று அரிய உணவு மருந்தாக அசைவ உணவு வகைகளை ஒட்டுமொத்தமாகச் சிபாரிசு செய்யமுடியாது. கொழுத்த உடல் பல வியாதிகளுக்கு அடிப்படை.
ஆக, சைவ உணவுக்கு மாறினால் ஆரோக்கியமாக மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் தயவு இன்றி நீண்ட நாள் வாழலாம் என்பது உறுதி.

கவலைக்கு மருந்து

உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்தப் பழைய உண்மையை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மீண்டும் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இத்துடன் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது டி.வி., தியானம் போன்றவற்றிற்குப் பதிலாக இருபது நிமிடங்கள் உடற்பயிற்சியோ அல்லது துரித நடை ஓட்டமோ செல்வது நல்லது. இதற்காக நன்கு துடிப்பாகச் செயலாற்றும் 34 மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். முதல் குழு ஓர் அறையில் அமைதியாக அமர்ந்தது. இரண்டாவது குழு பரிசோதனைச் சாலைக்குள்ளேயே ‘ஜாக்கிங்’ செய்தது. மூன்றாவது குழு உடற்பயிற்சி செய்தது. இருபது நிமிடங்கள் கழிந்ததும் ஓவ்வொரு குழுவையும் பரிசோதித்தனர். உடற்பயிற்சி செய்தவர்கள் மற்ற இரு குழுவினர்களைவிட 25% அளவில் ஓய்வு நிலையில் இருந்தனர். தியானமும், ஜாக்கிங்கும் கொஞ்ச நேரம் கழித்து ஓய்வு நிலையைத் தரும். உடனடி நிவாரணத்திற்கு உடற்பயிற்சி நல்லதாம்.
கவலைப்படாதே சகோதரா…
உடல் நலமும் நல்ல உற்சாகமான மனநிலையும் தேவை என்றால் கவலைப்படாதீர்கள்!
எப்படிப்பட்ட நோயும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் நமது அமைதியே உடல் அணுக்களில் பரவி நோய்களைக் குணமாக்கிவிடும். பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வினைக்கொண்டு வந்துவிடும்.
இந்த முறையைப் பின்பற்றினால் எளிதாக குணம் பெறலாம். மருந்துகள் மீது உள்ள நம்பிக்கை அதிகமாவதைவிட, நம் உடல் தானாகவே குணப்படுத்திக்கொள்ளும் சக்தியுடையது. அது நன்றாகக் குணமாகிவிடும் என்று மனப்பூர்வமாக ஒரு இம்மியளவு கூட சந்தேகம் இல்லாமல் முழுமையாக நம்பினால் முற்றிலும் குணமாகிவிடும். எனவே, மகிழ்ச்சியாக வாழுங்கள்.
இந்த உண்மைகளை ஆஸ்திரிய மனோதத்துவ டாக்டரான ஆல்பிசட் ஆட்லர் கண்டுபிடித்து நிரூபித்தும் காட்டினார்.
கவலையினால்தான் இதய நோய், புற்றுநோய் மட்டுமல்ல மூட்டுவலி, தலைவலி, இளமையிலேயே முதுமை, வயிற்றுக்கோளாறுகள் முதலியன வருகின்றனவாம்.
உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்படாதீர்கள். நம்பிக்கையுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்புங்கள். கஷ்டங்கள் அகலும் என்று நம்புங்கள்.
இத்துடன் உங்கள் நோயையும் அகற்றும் மனதையும் அமைதிப்படுத்தும் சில உணவு மருந்துகளையும் பின்பற்றுங்கள்.
மாடர்ன் ரொட்டி போன்ற கோதுமை ரொட்டியைக் காலையில் சாப்பிடுங்கள். இல்லையெனில் கைக்குத்தல் அரிசி, கோதுமை உப்புமா சாப்பிடுங்கள். டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் மூளைக்கு படுவேகமாகச் செல்லவும் செய்தி சொல்லவும் தவிடு நீக்காத இந்த தானிய உணவுகள் உதவுகின்றன. இதனால் மூளையும் மனமும் அமைதியடைகின்றன. நோய் தானாகக் குணமாக உடலில் சூழ்நிலைகள் உருவாகின்றன.
ஆரஞ்சுப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு அடிக்கடி மூளைக்கு கண்ட கண்ட கவலைகளையும் தெரிவிக்கும் மின் ஆற்றல் போன்ற துடிப்புகள் கொண்ட நரம்புகளைக் கட்டுப்படுத்தி மனதை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும்.
இதே நன்மைகளை வாழைப்பழம், சீஸ், பால், ஏப்ரிகாடி, வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளும் செய்கின்றன. குறிப்பாக வாழைப்பழமும், பாலும் தினமும் சாப்பிட்டு மூளைக்குக் கவலைகளைத் தெரிவிக்கும் நரம்புகளைக் கட்டுப்படுத்துங்கள்.
சட்டென்று குணம் மாறி வள் வள் என்று விழுதல் என்பது கவலையான பின்னணியின் வெளிப்பாடே. வைட்டமின் பி (B) குறைந்தாலும் எளிதில் கோபம் கொள்ளுதல் அதிகரிக்கும். இதனால் நரம்புகள் பலவீனமாகும். கவலைகளால் புதிய நோய்கள் உண்டாகும். எனவே இவர்கள் உருளைக்கிழங்கைத் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். அசைவம் எனில் மீன் நல்லது. இந்த வைட்டமின் மீனின் மூலம் நன்கு கிடைக்கும்.
உணர்ச்சிக் கொந்தளிப்பால் உடலும் மனமும் சோர்வடையும் சிலருக்கு மூளைக்காய்ச்சல் கூட வரலாம். தயாமின் என்ற பி வைட்டமின் அதிகமுள்ள அரிசி, மீன், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள் மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் நன்கு சேர்த்துப் பலப்படுத்த ஹார்லிக்ஸ், ஹார்லிக்ஸ் ரொட்டி போன்ற மாவு வகைகளையும் ரொட்டி வகைகளையும் உணவில் சேர்க்கவும்.
மக்னீசியம் குறைந்தால் உடலும் மனமும் கடும் சோதனையில் இருக்கின்றன என்று பொருள். இவர்கள் டாக்டர்களையும் மாற்றுவார்கள். இவர்கள் சோயா மொச்சையையும் வாழைப்பழத்தையும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். மதியம் பசலைக்கீரை அல்லது தண்டுக்கீரை சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து கிடைக்கும் மக்னீசியம் உணர்வுகளைச் சமநிலைப்படுத்தும். இதனால் நோய்களும் குணமாகும்.
தினமும் மூளையுடன் தொடர்புள்ள இரண்டு கட்டை விரல்களையும் சரியாக 5 நிமிடங்கள் பிடித்து விடுங்கள். பிறகு 15 அல்லது 20 நிமிடங்கள் கண்களைமூடி அமைதியாக இருங்கள். கடல் என்றோ அமைதி என்றோ மனதுக்குள் சொல்லித் கொள்ளலாம். இந்த இரண்டு அம்சங்களாலும் மனம் உண்மையில் அமைதியடையும். கவலையை முறியடிக்கும் உணவுகளும் தினமும் சேர மன அமைதி தொடர்ந்து கிடைக்கும். இதனால் பல்வேறு நோய்களும் குணமாகும். பிரச்னைகளுக்கும் நல்ல முடிவுகள் தோன்றும்.

சாம்ப்ராணி இலை

சாம்பிராணி இலை
இது சிறிய செடியாக இருக்கும். தண்டு எளிதில் உடையும் தன்மை வாய்ந்தது. இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும்.
இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.
இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும்.
இதில் இரண்டு வகை உண்டு. அடி வரை வளரும் வேர்கள், அதன் ஆழம் செல்லாமல் கொத்து வேராகவே இருக்கும்.
மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும்.
தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.
அழகுக்கூடும்…

Wednesday, December 17, 2008

இயற்கை படங்கள்




பசுவின் சிறுநீர்

பசுவின் சிறுநீரைப் பாட்டில்களில் அடைத்து ஐந்நூறு மிலி ஐம்பது ரூபாய்க்கு விற்கின்றனராம்.பசுவின் சிறுநீர் தினமும் ஐந்நூறு மிலி குடித்து வந்தால் உடல் முழு பலத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்குமாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நாம் ஆரோக்கியத்துடன் வாழ பசு சிறுநீர் உறுதுணையாய் இருக்கும்.சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை பசு சிறுநீர் குடிப்பதால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமாம்.அதே போல நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு போன்ற கோளாறுகளையும் தீர்த்து வைக்கும் திற பெற்றதாம் இந்த பசு சிறுநீர்.நமது உடலில் உள்ள செல்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும் திறன் பெற்றதாம் இந்த பசு சிறுநீர்.பசுவின் சிறுநீரில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்று வேறு சில அமைப்புகள் கூட பிரசாரம் செய்து வருகின்றனவாம்.அரசு ஆதரவோ, உதவியோ இதற்கு இதுவரை கிடைக்கவில்லையாம்.அதே போல பசு சிறுநீரை அப்படியே குடித்து விடக் கூடாதாம்.பசுவின் சிறுநீரை சேகரித்து, சூடாக்கி சுத்திகரித்து, அதன் மருத்துவ குணம் மாறாமல் பாட்டிலில் அடைத்து இவர்கள் விற்பார்களாம்.இவர்களிடம் வாங்கிக் குடிக்க வேண்டுமாம், அப்போதுதான் அது உடல் நலத்திற்கு நல்லதாம் (யார் உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லவே இல்லை, ஒரு வேளை விற்பவருக்கு நல்லது போல)மைசூரைச் சேர்ந்த மைசூரு பிஞ்சாரேபோல் சொசைட்டி அமைப்பு இப்போது இந்த விற்பனையைத் தொடங்கியுள்ளதாம்.மைசூரில் தினமும் 15 பாட்டில்கள் பசு சிறுநீர் விற்பனை ஆகிறதாம்.இது போன்ற செய்திகளை வெளியிட்டு தமிழர்களிடம் மூட நம்பிக்கையைப் பரப்புவதே தனது குறிக்கோள் என்பதைப் போல செயல்படும் தினமலர் இதழ்தான் இந்த செய்தியையும் வெளியிட்டு உள்ளது.ஏற்கனவே கழுதைப் பாலைக் குடித்தால் குழந்தைகளுக்கு நல்லது, பெரியவர்களுக்கு நல்லது என்று ஒரு கதையைக் கிளப்பி தமிழகத்தின் குக்கிராமங்கள் தொடங்கி சென்னை வரை அந்த செய்தி பரவி எல்லோரும் கழுதையத் தேடி அலைந்தனர்.இப்போது இந்தக் கதை வேறு, இதற்கு இன்னும் என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகின்றனவோ.இது போன்ற செய்திகளைப் பரப்புபவர்கள் மீது நாம் வருத்தப்படுவதை விட யார் எதைக் கூறினாலும் அதை அப்படியே நம்பி அதைச் செய்ய முயலும் நமது மக்களின் மனநிலை மனநிலை மாற என்ன வழி என்பதை யோசிக்க வேண்டும்.எந்த ஆதாரமும் இல்லாமல் இது போன்ற செய்திகளை வெளியிட்டு மக்களை தவறான வழிகளில் வழிநடத்த முயல்வது ஏனோ?தினமும் 50 ரூபாய் குடுத்து 500 மிலி பசு சிறுநீரை வாங்கிக் குடித்து வருவது எல்லாராலும் செய்ய இயலுமா? (500 மிலி பாலின் விலை 10 க்குள்தான்,)இதனால் வேறு ஏதாவது தவறான பின்விளைவுகள் ஏற்பட்டுப் போனால் அந்த விளைவுகளுக்கு இவர்கள்தானே பொறுப்பு.இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து செய்திகள் வெளியிடும் இவர்கள்,தமிழகத்தில் எத்தனை ஏழை விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு உரிய விளம்பரமும் கிடைக்காமல் அதனால் அதற்குரிய பலன்களை அடையாமல் தவிக்கிறார்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிட முடியாதா?தமிழகத்தில் எத்தனை ஏழைப் பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பல பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கின்றனர், அந்தப் பொருட்களின் விற்பனைக்கு உதவலாமே?எத்தனையோ ஏழைகள் நோயாளிகளாக அமருத்துவ உதவிகள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர் அவர்கள் பற்றி செய்திகள் வெளியிட்டு அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வழி செய்யலாமே?தங்களிடம் உள்ள பத்திரிகை என்னும் ஆயுதத்தை வைத்து மக்களுக்கு இயன்ற அளவு நன்மைகள் செய்ய முயற்சிப்பதே பாரம்பரியம் மிக்க ஒரு பத்திரிக்கையின் முக்கியக் கடமை.அதைச் செய்ய மனம் இல்லாவிட்டால் குறைந்த பட்சம் இது போன்ற மூட நம்பிக்கை பரப்பும் செய்திகள் அல்லது அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதையாவது தவிர்க்கலாமே...............

கிரிக்கெட் லைவ் link

கிரிக்கெட் லைவ் ஷோ பார்க்க இங்கே சொடுகவும்.
CRICTIME.COM
freedocast.com
www.sporthours.net
http://superwebtv.com/
http://dekabreak.001webs.com/

தமிழா தமிழா

அனைவருக்கும் வணக்கம்,

எனது முதல் படைப்பு

Hi All

Hi all ,

Good morning.