Pages

Thursday, December 3, 2009

கூந்தலை பராமரிக்க சில tips

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாதுமென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது.
கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே, கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம்.
புரதச்சத்து:கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
கார்போஹைடிரேட்:கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.கொழுப்பு சத்து:உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது. எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.
வைட்டமின்கள்:*மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து,தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.* நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவுஏற்படுவதை தடுக்கிறது.*ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.*”
பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.*
இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி, உடலின் அனைத்து செல்களுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே, வாரத்திற்கு மூன்று நாட்கள், 30 நிமிடங்கள் முறையாக உடற்பயிற்சி செய்தாலே போதுமானது.
மேலும், டீ, காபி மற்றும் மது ஆகியவை அருந்துவது, உடலின் தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச் சத்துக்களை வெளியேற்றி விடுகிறது. அவை, உணவில் இருந்து ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. டீ மற்றும் காபி குடிப்பவர்கள், தினமும் ஒரு கப் என குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக பழச்சாறுகள் போன்றவற்றை குடிக்கலாம்.

Monday, November 30, 2009

விவேகானந்தரின் பொன்மொழிகள்..

*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

*வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

*ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.

*ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

* ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!

*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

*எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். *எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.

*தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும்.

*அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும். *ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.

*அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.

*இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.

*தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.

*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).

*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

*பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

*கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

*உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.*மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

*சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

*அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

*உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.

*நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.

*இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.

* கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

* ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.

* உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.

*மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.

* உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும்.

* உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.

* உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.

* பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

* சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும். *தியானம்எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடையில் தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்!

*ஞானதீபம் ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம். அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!

*மனதை அடக்கு எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.

Wednesday, November 18, 2009

நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

நம் எல்லாருக்கும் சரிசமமாக ஆண்டவனால் அளந்து கொடுக்கப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம்.
நேற்று என்பது செல்லாத காசோலை.
நாளை என்பது பிராமிசரி நோட்டு.
இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம்.
எனவே, இன்றைய நேரத்தை எப்படிச் செலவழிக்கின்றோம் என்பதே முக்கியமான கேள்வி.
1. நேரத்தை திட்டமிடுங்கள் (Time Scheduling)
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை ஒவ்வொரு 30 நிமிடத் தையும் செயல்வாரியாக, அட்டவணைப் படுத்துங்கள். உங்கள் செயல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.அ. பயனுள்ளவைஆ. அன்றாடச் செயல்கள்இ. பயனில்லாதவை
உங்கள் 24 மணி நேரத்தில் எத்தனை மணிகள் பயனில்லாதவையாக செலவழிக்கப் பட்டிருக்கின்றது என்பதை கண்கூடாக அறிய முடியும். அவற்றைக் குறைத்து பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்துங்கள். அன்றாடச் செயல்களிலும் தேவையான அளவு நேரத்தை மட்டுமே உபயோகப்படுத்துங்கள். இவ்வாறு பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்தினால் நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக மாறி வருகிறீர்கள் என்பது உறுதியாகிறது.
2. நேரத்தை வீணடிக்கும் நிகழ்ச்சிகள்(Time Wasters)
நேரத்தை வீணடிக்கும் செயல்களுக்கு இரண்டு காரணங்கள் : நீங்கள் மற்றும் மற்றவர்கள்
அ. நீங்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்1. ஒத்திப்போடுதல் (Procrastination)2. போதுமான விவரங்கள், தெளிவு இல்லாமை3. மற்றவர்கள் மேல் பழி கூறுதல்
ஆ. மற்றவர்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்1. அன்றாட அலுவல்களில் மற்றவர்களுக்காக தேவைக்கதிகமான நேரம் செலவழித்தல்.
2. விருந்தினர், சுகமின்மை, மின் தடங்கள், மற்றும் பல.3. பிறர் செய்யும் தவறுகள்4. சூழ்நிலை
உகந்த நேரம் (Preferential / Prime Time)
ஒவ்வொருவருக்கும் காலை முதல் இரவு வரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரம் உற்சாகமும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அந்த வேளையில் மூளையும் சிறப்பாகச் செயல்படும். சிலருக்கு அதிகாலையாக இருக்கலாம். சிலருக்குப் பின்னிரவாக இருக்கலாம். உங்களுக்கு உகந்த நேரத்தில் கடினமான, முக்கியமான விஷயங்களைச் செய்தால் அது சிறப்புப் பெறும்.
காலந்தவறாமை (Punctuality)
கால தாமதம் நமது நேரத்தை மட்டுமின்றி, மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிக்கிறது. சிறிது முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் இருந்தால். காலதாமதம் ஏற்படாது. மேற்கத்திய நாடுகளில் காலதாமதம் ஒரு மன்னிக்க முடியாத குற்றமாக, கேவலமாகக் கருதப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் காலந் தவறாமையின் மகத்துவம் இன்னும் பலருக்குப் புரியவில்லை என்பது தான் வேதனை. காலந் தவறாமை ஒரு தலைவருக்குள்ள தகுதிகளில் முக்கியமானது.நேரத்தை நிர்வகித்தல் (அன்றாட வேலைகள் தவிர)உங்கள் வேலைகளை 4 வகையாகப் பிரியுங்கள்.
1. செய்தே ஆக வேண்டிய வேலை (Got to do)இன்றேசெய்ய வேண்டிய முக்கி வேலைகள் – அவசரம்
2 செய் வேண்டிய வேலை (Need to do)அடுத்த சில நாட்களில் முடிக்க வேண்டிய வேலைகள் – முக்கியம்ஆனால் அவசரமில்லை.3. செய்ய விரும்பும் வேலை (Like to do)உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வேலைகள் – முக்கியமும் இல்லை – அவசரமும் இல்லை.
4. செய்யக்கூடாத வேலைகள் (Not to do)
வேண்டாத குப்பைகளை, பேப்பர்களை, சேகரித்தல், தேவையற்றநீண்ட நெடிய உரை யாடல்கள், வாக்குவாதங்கள், சிந்தனைகள்.
நேரத்தை பயன்படுத்த சில குறிப்புகள்
1. ஆங்கில அகராதியில் ஓரிரு வார்த்தைகளை யாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.2. 15 அல்லது 30 நிமிடம் மனதிற்குப் பிடித்த நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.3. மறுநாளைக்கு தேவையானவற்றை தயார் படுத்த வேண்டும்.4. தினமும் நாட்குறிப்பில் மணிவாரியாக உங்கள் செயல்களைப் பதிவு செய்யுங்கள்.5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். நாளைய வேலையையும் இன்றே செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதீர்கள்.6. கடினமாக உழைக்க வேண்டும் என்பதில்லை; திட்டமிட்டு, அழகாக, கவனமாக, உரிய நேரத் தில் உரிய வேலையை உளமாரச் செய்தால் போதும்வெற்றி உங்கள் வீடு தேடி வந்து வாழ்த்தும்.
நேரத்தை – திட்டமிடுங்கள்! – பயன்படுத்துங்கள்! – கடைப்பிடியுங்கள்!

Wednesday, November 4, 2009

நீங்களும் I.A.S. ஆகலாம்

ஐ.ஏ.எஸ்"., சொல்லும்போதே ஒரு இன்பமும், கம்பீரமும் தானாகவே தலை தூக்கும். நிறைய அதிகாரம் கொண்ட பதவி. அரசு சேவைகளில் ( போக்குவரத்து உட்பட ) நிறைய சலுகைகள் உண்டு. மற்றபடி சம்பளம் அதிகமென்று சொல்லிவிட முடியாது, என்றாலும் இந்தியாவை வல்லரசாக்கும் கனவு கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான அற்புத நுழைவாயில் இது.
சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது:
IAS ஆக சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அது சுலபமல்ல. சுமார் ஒரு வருடத்திற்காவது அது இழுத்துச் செல்லும். இந்த தேர்வுகளை நடத்துவது, UPSC ( UNOIN PUBLIC SERVICE COMMISSION). இந்த தேர்வுகளை எழுதுபவர் பல்வேறு அரசு பதவிகளில் சேர வாய்ப்பு உண்டு என்றாலும், பலரது கனவும் IAS தான். கலெக்டர் கனவு. தேர்வுகளில் க்ரூப் A வில் உச்சமாகக் கருதப்படுபவை IAS, IFS, IPS ஆகியவை. இதே பிரிவில் உள்ள பிற துறைகள் Customes, Excise, Revenue, Postal ஆகியவை. IAS, IPS பதவிகளில் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி. பிறவற்றுக்கு நேபாளம், பூடான், திபெத் அகதிகளுக்கும் அனுமதி உண்டு. பட்டதாரிகள் மட்டுமல்ல, பட்டப் படிப்பைக் கடைசி வருடம் படிப்பவர்கள் கூட இந்த தேர்வை எழுதலாம். 21/30 வயதுக்குள் அதிக பட்சம் 4 முறை எழுதலாம். OBC என்றால் 7 முறையும், SC/ST என்றால் எவ்வளவு முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் விவரம்:
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் இது குறித்த அறிவிப்பு வரும். போஸ்டல் ஆர்டர் அனுப்பி, UPSC அமைப்பிடமிருந்து விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பம் சுமார் இருபது ரூபாய். ஜனவரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டியிருக்கும். மார்ச் அல்லது ஏப்ரலில் ஹால் டிக்கெட் வந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று நுழைவுத் தேர்வு நடைபெறும். இறுதித் தேர்வு அக்டோபர், நவம்பரில் நடைபெறும்.
நுழைவுத் தேர்வு:
நுழைவுத் தேர்வில், பொதுக் கல்வி ( General Studies, 150 marks) விருப்பப் பாடம் (300 marks) என்று இரண்டு தாள்கள். இதில் நெகட்டிவ் மதிப்பெண் முறை உண்டு. அதாவது தவறான விடைகளைத் தேர்ந்தெடுத்தால் மதிப்பெண்களைக் குறைத்து விடுவார்கள். முதல் தாளில் இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, சமீபத்திய நிகழ்வுகள், தினசரி அறிவியல், புள்ளி விவரங்களின் அடிப்படைத் தன்மைகள் ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெறும். ஜூலை அல்லது ஆகஸ்டில் நுழைவுத் தேர்வின் ரிசல்ட் வெளியாகிவிடும். வென்றவர்கள் இறுதித் தேர்வை எழுதலாம்.
இறுதித் தேர்வு:
இறுதித் தேர்வில் ஒன்பது பேப்பர்கள்.
* பதினெட்டு இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்று.
* ஆங்கிலத் தகுதிக்கான தேர்வு.
மேற்கூறிய இரண்டும் தகுதிக்கானவை.
* ஒரு பொதுக் கட்டுரைத் தேர்வு. (அதிக மதிப்பெண் 200)
* இரண்டு பொது அறிவுத் தேர்வுகள்.(ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300).
* நான்கு விருப்பப் பாடங்கள் (ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300), (ஆங்கில பாடத்தைத் தவிர மற்றவற்றைத் தமிழ் மற்றும் பிராந்திய மொழிகள், ஹிந்தியிலும் எழுதலாம்).
இப்படி மொத்த மதிப்பெண்கள் இரண்டாயிரம். இதோடு நேரடித் தேர்வுக்கான முந்நூறு மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரிசையில் ( பெரும்பாலும் IAS, IPS, IFS என்றுதான் இவை முறையே இருக்கும்), பதவிகள் அளிக்கப்படும். நேர்முகத் தேர்வு டெல்லியில்தான் நடக்கும். இதற்கு முந்நூறு மதிப்பெண்கள்.
டிப்ஸ்::
* கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இந்த இந்த பாடத்திலிருந்து இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. அந்த அளவுகோல் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குப் பொருந்தாது. ஒருசில பொதுவான அனுமானங்கள் வேண்டுமானால் உதவலாம். உதாரணமாக, சமீப வருடங்களில் நுழைவுத் தேர்வில் முதல் தாளில், சமீபத்திய நாட்டு மற்றும் உலக நடப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* நுழைவுத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகிய இரண்டிலுமே விருப்பப் பாடமாக ஒன்றையே எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் நேரமும் குறையும், ஆழமாகவும் படிக்கலாம்.
*எதில் மிக அதிக மதிப்பெண் ஸ்கோர் செய்ய முடியுமோ, அதை விருப்பப் பாடமாக தேர்வு செய்வது புத்திசாலித்தனம். Accountancy, வேதியியல் போன்ற பாடங்களில் சரியான விடை என்றால் முழுமையான மதிப்பெண்ணை கொடுத்தே தீர வேண்டும். ஆனால் இதெல்லாம் எப்போதும் எடுபடும் வாதமல்ல.
* ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்தால், அவற்றில் சில பாடங்களாவது, இரண்டிலும் இடம் பெற்றிருக்கும். இயற்பியலும் வேதியியலும், விலங்கியலும் தாவரவியலும், பொலிட்டிகல் சயின்ஸும் வரலாறும், புவியியலும் சமூகவியலும் இப்படியாக ஜோடிகளை அமைத்துக் கொள்ளலாம். உங்கள் இரு விருப்பான பாடங்களுக்குமான தேர்வு நாட்களுக்கும் நடுவே போதிய இடைவெளி இருக்கும்படியான பாடங்களை தேர்ந்தெடுப்பது ஓர் உத்திதான்.
* விடைகளை வேகமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். காரணம், குறைந்த அவகாசமே இருக்கும்.
* சில பிரிவுகளில் சாய்ஸ் இருக்கும். அப்போது தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பதில்கள் எந்த கேள்விக்கு அமையுமோ அவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
* ஒரு முறைக்கு மேல், தேர்வை எழுத மனதைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் முறையே தேர்வில் வெற்றி பெற்று வந்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.
* நாளிதழ்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். ஆங்கில நாளிதழ்தான் ஏற்றது.
* Civil Services, Chronicle, Front Line, Competition Wizard, Competition Success & GK போன்றவை தேர்வுக்கு தயார் செய்ய பெரிதும் உதவுபவை.
* BA போன்ற பட்டப் படிப்பென்றால் இரண்டாம் வருடமும், BE போன்ற தொழில் முறைப் படிப்பு படித்தால் மூன்றாவது வருடமும் பயிற்சி வகுப்புகளில் சேருவது சிறப்பு.

Thursday, October 29, 2009

வாழ்க்கை பாடம்

வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள்.
நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள்.
எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும். அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.
மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள். உங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் லட்சியத்திற்குத் தயார் படுத்துங்கள். அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின், வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம். இல்லாவிட்டால்,
இனி என்ன செய்யலாம் என யோசித்தே மற்றவருக்கும் வாய்ப்புகளை வழங்குவோம். எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, கடவுள் ஒரு வழியை மூடினால் ஒரு வழியைக் காட்டுவார் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள். ஒரு நிகழ்வு நிகழ்வில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம். இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு பிடித்த செயலைச் செய்யுங்கள்.வீட்டில் எந்த இடமும் பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள். இயற்கை மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்தத் தனிமையில் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள். மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்தக் காலி இடம் நேர்மறை எண்ணங்களால் நிறையும். இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து உங்கள் லட்சியத்திற்குத் தேவையான உங்களிடம் இல்லாத திறமையைக் கற்றுக் கொண்டு, கடுமையான உழைப்புடன் நல்ல எண்ணங்களால் நல்முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி உங்களுக்கே!

Tuesday, October 27, 2009

ஒரு டிரைவ்இ மறைக்க

முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.
முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer
இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.
அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்

Thursday, October 15, 2009

குறிக்கோள் - நன்றி தன்னம்பிக்கை

5 அற்புத வழிமுறைகள்
வெற்றி வாழ்விற்கு, சாதனை வாழ்விற்கு, சந்தோஷ வாழ்விற்கு அடிப்படை குறிக்கோள் மற்றும் வைராக் கியத்துடன் கூடிய திட்டமிட்ட செயல்பாடே ஆகும். வெற்றி என்பது குறிக்கோள்களை மட்டும் முடிவு செய்த வுடன் தானாக வருவது கிடையாது.
வெற்றி அல்லது சாதனை என்பது எந்த அளவுக்கு உங்கள் குறிக்கோளுக்காக வாழ்கிறீர்கள் என்பதை பொறுத்தே வருகின்றது. வெற்றி பெற்ற மனிதர்களிடம் கேட்பீர்களா னால், அவர்கள் நிச்சயம், “குறிக்கோளுக்காகவே எங்கள் வாழ்க்கை” என்ற தாரக மந்திரமே எங்கள் வெற்றிக்கு காரணம் என கூறுவார்கள். இதைத்தான் உலகத்தில் மிகவும் அற்புதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி வேடிக்கையான செய்திகள் நிரூபிக்கின்றது. எடிசன் தன் கண்டுபிடிப்புகள் என்ற குறிக்கோள்களுக்காக உணவை மறந்த நாட்கள், மனைவியையே மறந்த தருணங்கள் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. ஆகவே குறிக் கோள்களை காதலிக்க துவங்கினால், குறிக் கோள்களை அடைய எத்தகைய தியாகங் களையும் செய்ய தயார் ஆகுவோம். வெற்றிகள் குவியத் துவங்கும். மகிழ்வான வாழ்க்கை வசப்பட ஆரம்பிக்கும். சாதனை சரித்திரத்தில் உங்கள் பெயர்களை பொன்னெழுத்துகளால் பொறிக்கப் படும் வாய்ப்பும் உருவாகும்.
சாதனை சரித்திரத்தை உருவாக்க வெற்றிப் பயணத்தை துவங்கி இருக்கும் என் இனிய தன்னம்பிக்கை வாசக நண்பர்களே, வாழ்வில் சாதனைகளை உருவாக்க உதவும் உயர்ந்த குறிக்கோள்களை உருவாக்கி, விடாமுயற்சியுடன் செயலாற்றி எளிதில் வெற்றியை ஈட்டும் வழிமுறைகளை இக்கட்டுரை மூலம் பார்க்கலாம்.
1. உள்நோக்கி பயணம் செய்யுங்கள்
இன்று பலரும் தங்கள் ஆசைகளை, குறிக்கோள்களை, விருப்பங்களை நிறைவேற்ற முடியாமல் போக முதல் காரணம், அந்த ஆசை அல்லது குறிக்கோள் உண்மையிலேயே அவருடைய ஆழ் மனதின் ஆசையாகவோ, குறிக்கோளாகவோ இருக்காது. அந்த ஆசை அல்லது குறிக்கோள் அவர் பெற்றோராலோ அல்லது அவர் நண்பராலோ அல்லது ஆசிரி யாராலோ அல்லது ஏதேனும் சூழ்நிலைகளோ அல்லது ஏதேனும் திரைப்பட காட்சிகளாகவோ அல்லது ஏதேனும் தொலைக்காட்சி தொடர் களாகவோ உருவாக்கப்பட்ட ஆசை அல்லது குறிக்கோளாக இருக்கலாம்.
ஆனால் நம் ஆழ்மனது உறுதியாக அடைய வேண்டும் என முடிவு செய்து விடுகின்ற ஆசைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை புறமனதும், ஆழ்மனதும் இணைந்து செயலாற்றி நிறைவேற்றி விடுகின்றன. எடுத்துக் காட்டாக உயிர்வாழ உதவும் ஆக்சிஜன், உணவு, நீர் போன்றவற்றை தேவைக்கேற்ப அடைந்தே தீரவேண்டும் என்ற அடங்கா ஆசை மற்றும் தேவை இயற்கையால் நம் ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இப்போது நம் புறமனது வேண்டாம் என்று நினைத்தாலும் ஆழ்மனது எப்படியாவது புறமனதை ஒத்துக்கொள்ளச் செய்து நம் அடிப்படை தேவைகளை முடிந்த அளவுக்கு அடையச் செய்கின்றது. புறமனது உணவு வேண்டாம், கடமைதான் முக்கியம் என்று கட்டுப்படுத்த முயன்றாலும் ஆழ்மனது புறமனதோடு சமாதானத்தை ஏற்படுத்தி உணவு உண்ணுலதற்கான வழிவகையைச் செய்துவிடும்.
ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட குறிக் கோளை அடைய வேண்டும் என்று முடிவெடுக்கு முன், அந்தக் குறிக்கோள் உங்கள் ஆழ்மனதின் விருப்ப, தேவை, மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்புடையது தானா என ஆராய்ந்து பார்ப்பது எளிதாக குறிக்கோளை அடையும் வழிமுறைக்கு அடிப்படையாகும்.
எப்போதேனும் உங்கள் ஆழ்மனதிற்கு ஏற்புடையதல்லாத ஒரு குறிக்கோளை அடைய ஆசைப்பட்டால், முதலில் மீண்டும் மீண்டும் உங்கள் ஆழ்மனதோடு தொடர்பு கொண்டு உங்கள் குறிக்கோளை எடுத்துரைத்து உங்கள் ஆழ்மனத்தின் குறிக்கோளாக மாற்றுங்கள்.
2. குறிக்கோளை முடிவு செய்யுங்கள்
நீங்கள் உள்நோக்கிய பயணத்தின் மூலம் ஆழ்மனதின் தன்மையை அறிந்து, அதன் விருப்பத்திற்கு ஏற்ப குறிக்கோளை முடிவு செய்தாலும் சரி, அல்லது உங்கள் தவிர்க்க முடியாத தேவை அல்லது சூழ்நிலை திணிக்கும் குறிக்கோளாக இருந்தாலும் சரி, உங்களை வெற்றியினராக மாற்ற உதவப்போகும் குறிக் கோளை கவனமாக ஆனால் உறுதியாக முடிவு செய்யுங்கள்.
நீங்கள் முடிவு செய்யப்போகும் குறிக் கோள் எந்த அளவு பொருத்தமானதாக, சரியானதாக, சிறப்பானதாக இருக்கின்றதோ, அதைப் பொறுத்துதான், நம் மனது நம் குறிக்கோளுக்காக நம்மை செயல்பட செய்து நம்மை வெற்றியடையச் செய்யும்.
எனவே உங்கள் வாழ்நாள் / நீண்ட கால குறிக்கோளை அடையும் முயற்சியில், குறிக் கோளை முடிவு செய்வது என்பது மிகவும் முக்கியமான கட்டம் ஆகும். ஆகவே நண்பர்களே, நீண்ட கால குறிக்கோளை முடிவு செய்யும்போது, ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அல்லது ஒரு வருட காலத்தை செலவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள் முடிவு செய்யும் குறிக்கோள் உறுதியானதாக உயர்ந்ததாக, சிறந்ததாக, உள்ளத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஏனென்றால் பலர் அவசர கதியில், பிறர் தலையீட்டை அனுமதித்து தங்கள் ஆழ்மனதிற்கு ஏற்புடையதல்லாத குறிக்கோள்களை முடிவு செய்து, வெற்றிகளை ஈட்டினாலும், உலக சாதனை சரித்திரத்தில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர்.
எடுத்துக்காட்டாக பலர் ஆசிரியர், பெற்றோர் விருப்பத்திற்கு இணங்க இந்திய ஆட்சிப்பணியியல் (IAS)தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் வந்தும், ஒரு கட்டத்தில் தங்கள் பதவியை விட்டு விட்டு பிறதுறைகளில் மீண்டும் குறிக்கோள்களுடன் செயல்பட்டு அபரிதமான வெற்றிகளுடன் சாதனை நாயகர்களாக மாறமுடியாமல் அடங்கிவிடுகிறார்கள்.ஆகவே குறிக்கோளை முடிவு செய்யும் இந்த கட்டம் வாழ்க்கையில் மிக மிக முக்கிய மான தருணம். எனவே உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவதுடன், பல்வேறு வெற்றியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் அறிஞர் களிடமும் கருத்துக்களை கேட்டு மிக மிக கவன மாக சிறப்பாக குறிக்கோளை நிர்ணயம் செய்யுங்கள். அப்படி செய்தால், குறிக்கோளை நோக்கிய பயணம் வேகமாகவும், தடையற்ற தாகவும், மகிழ்ச்சியுடையதாகவும் அமைவது நிச்சயம்.
3. குறிக்கோளுக்காக வாழ துவங்குங்கள்
உங்கள் குறிக்கோள் நோக்கி நீங்கள் துவக்கிய பயணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்ந்த பலன்களை, விளைவுகளை, முடிவுகளை அடைய வேண்டுமானால், நிச்சயமாக நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக வாழ வேண்டும். குறிக் கோளினையே வாழ்க்கையாக மாற்றவேண்டும். இன்று வரை உலக சாதனை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவருடைய வெற்றி வாழ்வின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தீர்களானால், நிச்சயம் அவர்கள் தங்கள் குறிக்கோளையே வாழ்க்கையாக மாற்றி வைராக்கியத்தோடு வாழ்ந்திருப்பார்கள்.
எப்படி குறிக்கோளினை வாழ்க்கையாக மாற்றுவது?
சாதாரண ஒரு குறிக்கோளினை அடைந்தே தீர வேண்டும் என்ற அசாதாரண அவசியமாக மாற்றினால் மட்டுமே, உங்கள் வாழ்வில் நீங்கள் கனவு காணும் உயரிய செயல்களை அல்லது சாதனைகளை அடைய முடியும். எனவே நீங்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் குறிக்கோள் களை, அடைந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கூடிய இலக்குகளாக மாற்றுவது வெற்றிக்கு அடிப்படையாகும். குறிக்கோளையே வாழ்க்கையாக்க உதவும் வழிமுறைகள் :
மனதுக்கு பிடித்த குறிக்கோள்தானா என சரிபார்க்கவும்.
நீங்கள் அடைய நினைக்கும் குறிக்கோள் உண்மையிலேயே உங்கள் மனதுக்கு பிடித்த குறிக்கோள்தானா என ஆய்ந்து பார்க்கவும். அப்படி உங்கள் மனதிற்கு பிடிக்காத குறிக் கோளாக இருந்தால், நிச்சயமாக அந்த குறிக் கோளுக்காக உங்கள் நேரம் மற்றும் சக்தியை வீண் விரயம் செய்யாது வேறொரு குறிக்கோளை தேர்ந்தெடுக்க ஆயுத்தமாகுங்கள்.
திட்டவட்டமான குறிக்கோளா என உறுதி செய்யவும்
காரணம் நாம் அடைய நினைக்கும் குறிக் கோள் திட்டவட்டமானதாக இருந்தால் மட்டும் நம் மனதிற்கு அல்லது நமக்கு எதை அடைவதற் காக செயல்பட வேண்டும் என்ற உறுதியான உணர்வு இருந்து கொண்டிருக்கும். நாம் குறிப்பிட்ட எந்த விளைவுக்காக அல்லது முடிவுக்காக வாழ்கிறோம் என நம் ஆழ்மனதிற்கு உறுதியாக தெரிந்திருந்தால், நம் ஆழ்மனது நம்மை, நம் சக்தியை, நம் செயல்களை, நம் எண்ணங்களை முழுமையாக அந்த குறிப்பிட்ட இலக்கை நோக்கி செயல்படுத்த துவங்கும். நம் ஆழ்மனது திட்டவட்டமான செய்திகளை மட்டுமே நம்பும் தன்மை கொண்டது. அது நம் குறிக்கோளை நம்பி தன்னுள் இடம் அளித்து விட்டால், அந்த குறிக்கோளை நிறைவேற்றும் பொறுப்பை அது ஏற்றுக்கொள்ளுமானால், நிச்சயம் குறிக்கோளே நம் வாழ்வு என்ற நிலையில் நாம் நிச்சயம் தடைகளை தாண்டி வெற்றிகளை குவிப்போம். சாதனைகளை நிகழ்த்துவோம்.
குறிக்கோள்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்கலாமே
எப்போது உங்கள் மனது ஒரு உயரிய குறிக்கோளை அடைய வேண்டும் என்று முடிவு செய்கின்றதோ, உடனடியாக அந்த குறிக்கோளை எழுத்து வடிவத்தில் குறிக்கோளை திரும்ப திரும்ப படியுங்கள். தினமும் வாசியுங்கள். நீங்கள் தினமும் திரும்ப திரும்ப நடமாடும் இடங்களில் உங்கள் பார்வையில் படும்படி பதித்து வையுங்கள். இச்செயல் உங்களுக்கு உங்கள் குறிக் கோளை உங்கள் ஆழ்மனதில் பதிய வைக்க உதவும்.
ஆனால் சாதிக்க துடிக்கும் சாதனை மனிதர்கள் இந்த குறுக்கு வழிகள் எதுவும் இன்றியே அவர்கள் குறிக்கோளை நோக்கிய லட்சிய பயணத்தில் வைராக்கியத்தோடு, முழு மனதையும் ஈடுபடுத்தி செயலாற்றி வெற்றி கொண்டிருப்பர்.
தனியாத தாகம் கொள்ளுங்கள்
குறிக்கோளை அடைவதனால் வர விருக்கும். அற்புத நன்மைகளை நன்கு மனதில் பதிய வையுங்கள். இந்த நன்மைகள் உங்களுக்கு, உங்களை சார்ந்த குடும்பத்தவருக்கு, உங்கள், உங்கள் தன்மானத்திற்கு, சமூக அந்தஸ்திற்கு, உங்கள் பொருளாதார உயர்வுக்கு, உங்கள் வாழ்வின் அர்த்தத்திற்கு எந்த அளவுக்கு உதவி புரிய வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து முழுமையாக உணருங்கள். மேற்கண்ட எண்ணப் பதிவுகள் மற்றும் உணர்வுகளை மீண்டும் மீண்டும் மனக்காட்சித் திரையில் காணத் துவங்குங்கள். இந்த செயல் உங்கள் ஆழ்மனதிற்கு எப்படியேனும் இந்த குறிக்கோளை அடைந்தே தீர வேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தி விடும். அந்த தாகம் எந்த தடைகள் வந்தாலும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வெற்றிப்பாதையை நோக்கி வழிநடத்தும்.
முடியும் என்று நினைத்தால் முடியும்.
பலரும் குறிக்கோள்களை அடைய முடியாமல், குறிக்கோள்களையே விட்டுவிட காரணம், நான் சாதரணமானவன், நான் திறமை யற்றவன், என்னால் முடியாது என்ற எதிர்மறை எண்ணங்களே. உலக வரலாற்றைபுரட்டி பார்த்தால் தெரியும். வெற்றி பெற்றவர்களில் அதிகமானவர்கள் ஏழ்மை, ஊனம், கல்வியறி வின்மை, என பல்வேறு தடைகளை தாண்டி வெற்றி பெற்றவரே என்பது புரிய வரும்.
ஆகவே நீங்கள் குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்ற மனநிலையை உருவாக்க வேண்டு மானால், வெற்றியாளர்களின் சுயசரிதைகளை படிப்பது பயிலரங்குகளில் கலந்து கொள்ளுவது, வெற்றி பெற்றவரின் சொற் பொழிவுகளை கேட்பது, என்னால் முடியும், என்னால் முடியும் என சுய அறிவுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது.
வாழ்வின் அனைத்து பகுதிகளையும் கருத்தில் கொண்டு குறிக்கோள் முடிவு செய்வது நல்லதுகுறிக்கோள் முடிவு செய்யும்போது, வாழ்வின் ஒவ்வொரு பகுதி (குடும்பம், பொருளாதாரம், சமூகம், உடல்நலம், மனநலம் போன்ற காரணிகளை)களையும் திருப்திப் படுத்தும் அடிப்படையில் அமையும் படி பார்த்துக் கொள்ளவும்.
ஏனென்றால், குறிக்கோளை நோக்கி வேகமான வெற்றிப் பயணம் மேற்கொள்ளும் போது ஏதேனும் ஒரு வாழ்வு சார்ந்த காரணியில் திருப்தியின்மை ஏற்பட்டுவிட்டால், நம் குறிக்கோளை நோக்கிய செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகவே குறிக்கோள் நிர்ணயம் செய்யும் வழிமுறையின் போது, உங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் வாழ்வு சார்ந்த அனைத்து காரணி களிலும் எந்த எந்த நிலையை எட்ட வேண்டும் என்ற துணை குறிக்கோள்களையும் முடிவு செய்வது நல்லது.
எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஆண்டில், குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட நாளில், நாம் அடைய முடிவு செய்திருக்கும் வாழ்நாளில் அடைய வேண்டிய குறிக்கோளினை நோக்கிய பயணத்தின் குறிப்பிட்ட கால கட்டத்தில், நம் உடல்நலம் எப்படி இருக்க வேண்டும் (எடை அளவு, இரத்த அளவு போன்ற காரணிகளில்)நாம் குடும்பத்திற்கு வழங்கும் தரமான நேரத்தின் அளவு (Quality time) எந்த அளவு இருக்க வேண்டும் என்பது போன்ற ஒவ்வொரு காரணிகளையும் குறிக்கோள் முடிவு செய்யும் வழிமுறையின் போது கருத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வாறு குறிக்கோளை அனைத்து குடும்ப, சமுதாய, தனிப்பட்ட காரணிகளையும் கருத்தில் கொண்டு முடிவு செய்வோமானால் நம் லட்சிய பயணம் தங்கு தடையின்றி வேகமாக செல்வது உறுதி. வெற்றியும் உறுதி.
முடியும் என்றால் முடிவெடுங்கள்
குறிக்கோள் நோக்கிய பயணத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் மற்றொரு காரணி, உங்கள் குறிக்கோள் உங்களிடம் உள்ள பல திறன் மற்றும் நேரத்தின் மூலம் அடைய முடியும் குறிக்கோளா? இல்லையா என்பது.
நீங்கள் நிர்ணயம் செய்யும் குறிக்கோள் உங்கள் கல்வி தகுதி, உடல் பலம், பண பலம், தேர்ந் தெடுக்கும் கால அளவு போன்றவற்றையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும். எடுத்துக் காட்டாக ஒரு கல்லூரியின் முதல்வராக வேண்டு மானால் 10 வருடம் விரிவுரையாளராக பணி யாற்றியே ஆக வேண்டும். அப்போது தான் உங்கள் குறிக்கோள் உங்கள் வாழ்வின் அடிப்படை அம்சமாக மாறும். நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக அர்ப்பண வாழ்வு வாழ ஆரம்பிப்பீர்கள். உங்கள் சாதனை சாகசங்கள் எளிதில் நிறைவறேத் துவங்கும்.

Tuesday, September 29, 2009

வெற்றி சூத்திரம் நன்றி - தன்னம்பிக்கை

வெற்றி பெற வேண்டுமென்கிற வேட்கை யாருக்குத்தான் இல்லை. வெற்றிதானே மனிதருக்கெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கிறது. மானுடர்க்கெல்லாம் மகிழ்ச்சிதானே மண்ணுலக வாழ்கையின் தலையாய நோக்கம்.மகிழ்ச்சியாய் இருக்கிற மனிதர்களையெல்லாம் கேட்டுப்பார்த்தால் தெரியும் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். விரும்பியதை அடைந்தவர்கள்தானே வெற்றி பெற்றவர்கள்.
ஆழ்ந்து சிந்தித்தால் வெற்றியும் மகிழ்ச்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவைகள் எப்போதும் இணைந்தே இருப்பவைகள் பிரிக்க முடியாதவைகள்.
சரி, அப்படியென்றால் வெற்றி பெறுவதற்கு என்ன தேவை? கணக்குப்பாடத்தில் கணக்குகளை செய்வதற்கு சூத்திரங்கள் (Formula) இருப்பதுபோல வெற்றியடைவதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா? ஒருவேளை அதை நாம் தெரிந்துகொண்டால் வெற்றிக்கனியை சுவைப்பது சுலபமாகிவிடும் அல்லவா? ஆம்! இதோ வெற்றி சூத்திரம்.
வெற்றி என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் Success. இதை ஆங்கிலத்தில் MNEMONICS (First Letter of a list of points to remember) ஆக எடுத்துக்கொண்டால் பின்வரும் செய்திகளை ஒவ்வொரு எழுத்தும் நமக்கு விரித்துரைக்கும்.
SUCCESS என்கிற வெற்றிச் சொல்லின் விளக்கமாக கீழ்க்காணும் கருத்துக்களை தொகுத்து நம் வாழ்க்கையின் வசத்துக்குக் கொண்டு வந்தால் வெற்றி நிச்சயம். வெற்றி பெறுவதற்கு இன்றியமையாத இந்த குணங்களை பெறாமல் வெற்றி பெறுவது எங்ஙனம் நிகழும்?
S - Self Confidence = தன்னம்பிக்கைU- Understanding inter personal relationship = மனித உறவுகளை புரிந்து கொள்ளுத் மேம்படுத்திக் கொள்ளுதல்
C- Communiation Skill = சொல்வன்மை செய்திகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் திறன்
C- Creativity = படைப்பாற்றல் கற்பனை வளர்த்தை பயன்படுத்தி புதியன உருவாக்குதல்
E- Energic Attitude = உற்சாகமான மனப்பாங்கு
S-Superb Memory = மிகச்சிறந்த நினைவாற்றல்S- Self Motivation = தன்னைத்தானே செயலூக்கப்படுத்திக் கொள்ளுதல்

Monday, September 28, 2009

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை நன்றி தினமலர்

இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. இதனால் அவற்றுடனே நம் முழுப்பொழுதும் செலவழிகிறது. அலுவலகம் ஒன்றின் சொகுசுப் பொருளாகக் கம்ப்யூட்டர் கருதப்பட்ட எண்ணம் மறைந்து, அடிப்படைச் சாதனமாக இது மாறிவிட்டது. எப்படி திருமணமான ஒருவர் தன் மனைவி அல்லது கணவனுடன் பல வழிகளில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக் கொள்கிறாரோ, அதே போல கம்ப்யூட்டர்கள், அவை அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஆகியவற்றுடனும் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது போல, நம் அன்றாட அலுவல் வாழ்க்கை மட்டுமின்றி, சொந்த நலனிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். "உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்' என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா!நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம்.
முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.
ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும்.
மானிட்டரைப் பார்த்துவிட்டோம். இனி உங்கள் கைகளுக்குள் கம்ப்யூட்டருக்கான மந்திரக் கோலாகத் தவழும் மவுஸைப் பார்க்கலாம். எளிதில் அதனை அடைந்து கைகளுக்கு வலி எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உடம்பைச் சாய்க்காமல் அதனை சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில் வைப்பதனை அறவே தவிர்க்கவும். மவுஸ் கையாளும் அதே அளவில், அல்லது அதற்கும் மேலாக நாம் கீ போர்டினைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கீ போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல் தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில் உங்களுடைய மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் வளைந்திருக்க வேண்டும். இது உங்கள் நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.
இவை எல்லாம் கம்ப்யூட்டருடன் இணைந்தவை. இவற்றை நீங்கள் எங்கிருந்து இயக்குகிறீர்கள். நிச்சயமாய் உங்கள் நாற்காலிகள் தான். பல ஆயிரம் அல்லது லட்சம் செலவழித்து கம்ப்யூட்டர்களை வாங்கி, அவற்றை ஏசி அறையில் வைத்திடும் அலுவலகங்கள், அதனை இயக்குபவர்கள் பழைய வகை நாற்காலியிலேயே அமரட்டும் என விட்டுவிடுவார்கள். அங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. நீங்கள் அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும் வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும். இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன் மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம் அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து கால்களில் இருக்க வேண்டும்.
அடுத்ததாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை. ஒரேயடியாக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் என இருவகைகளில் ஒளியூட்டப்பட்ட கம்ப்யூட்டர் அறைகளே இப்போது உள்ளன. எங்கு பாய்ண்ட் இருக்கிறதோ அங்கு மின்விளக்குகளை அமைத்துவிடுகின்றனர். இது தவறு. இருக்கின்ற விளக்கு ஒளி போதும் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக்கூடாது. முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும். விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள் பின்னாலிருந்து ஒளி வரக்கூடாது. உங்கள் மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி வரும் வகையில் அமைக்கக்கூடாது. பொதுவாக நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம். அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம். ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர் ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும் அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது இன்னும் நன்றாக இருக்கும்.
பொதுவாக நம்மைப் பார்க்க வருபவர்கள் இல்லாமல், பக்கத்து சீட் நண்பர்களிடம் பேசாமல் பணியாற்ற கம்ப்யூட்டர் உதவுகிறது. இருப்பினும் பல கம்ப்யூட்டர் அறைகளில் தேவையற்ற சத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டருடன், அதன் புரோகிராமுடன் நாம் ஒரு சவாலுடன்தான் பணியாற்று வோம். அந்நிலையில் கூடுதலாகச் சத்தம் இருந்தால் நம் பணி ஒழுங்கு முறை கெட்டுவிடும். சரியான ஒலி நமக்கு பணியில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிறிய அளவில், மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை, அறையில் கசிய விடலாம். அல்லது அவை எதுவும் இல்லாமல், அமைதியைப் பேணலாம். இது அங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தைப் பொருத்து அமைக்கப்பட வேண்டிய விஷயமாகும். செலவு மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மின்விசிறி மட்டும் கொண்டு சில கம்ப்யூட்டர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாப்ட்வேர் நிறுவனத்தில், செலவைக் குறைப்பதற்காக இன்றும் இரவில் ஏர் கண்டிஷனர் இயங்குவதை நிறுத்திவிடுவதாக என் நண்பர் ஒருவர் கூறினார். இது மோசமான ஒரு நிலையை அங்கு பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, மேற் கொள்ளப்படும் வேலைக்கும், அங்கு பயன் படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கும், அதில் கையாளப்படும் டேட்டாவிற்கும் உருவாக்கும். எனவே வெப்பம் மிகுதியான நம் ஊரில் கூடுமானவரை கம்ப்யூட்டர்கள் பயன்படும் இடத்தில் குறைந்த வெப்பம், அல்லது சற்று மிதமான குளிர் சீதோஷ்ண நிலை இருப்பது உகந்தது.
அதே நேரத்தில், அறைக்குள் வெளியிடப்படும் குளிர் காற்று நேரடியாகக் கம்ப்யூட்டர்கள் மீதோ, அல்லது அவற்றை இயக்குபவர் மீதோ படுவதனையும் தவிர்க்க வேண்டும். இறுதியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள்தான். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள். உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப் பண்பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள் கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக நீங்கள் வேலை வேலை என்று அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா? அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில் தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால் உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது.
மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற முடியாது. மின்சார ட்ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ் நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம் செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும் கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண் தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக் கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன் செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!

Thursday, September 17, 2009

பிளாஸ்டிக் என்னும் கொடுரம்

ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது.

அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம்.

இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.- கேரி பேக்குகள்- காய்கறி கேரி பேக்குகள்- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்- வீட்டு குப்பை பைகள்- வணிக குப்பை பைகள்- தொழிற்சாலை லைனர்கள்- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்மக்கிப் போவதற்கு ஆகும்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைபழத் தோல் - 2-10 நாட்கள்

பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்

காகிதம் - 2-5 மாதங்கள்

கயிறு - 3-14 மாதங்கள்

ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்

உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்

டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்

தோல் காலணி - 25-40 ஆண்டுகள்

நைலான் துணி - 30-40 ஆண்டுகள்

தகர கேன் - 50-100 ஆண்டுகள்

அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்

பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்

டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமைஅனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன

Wednesday, July 15, 2009

கண்களை பராமரிக்க சில tips

உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது போலவே, நம் கண்களின் ஆரோக்கியமும் மிக முக்கியமாகும். கண்களைப் பராமரிப்பதற்கும், அவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கும் சில வழிமுறைகளைக் காண்போம்.
கண்கள் பொன்னை விட மதிப்பானவை. அவற்றை பராமரிப்பதற்கும் நாம் நேரத்தைச் செலவிட வேண்டியது அவசியம். சுத்தம், உணவு, சரியான நேரத்தில் பரிசோதனை, உடற்பயிற்சி போன்றவற்றால் நம் கண்களுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். உணவில் கவனம் தேவை..! * வாரம் இருமுறை உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது, முதுமையில் ஏற்படும் பார்வை பிரச்சனைகளை தடுப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றது.
* சர்க்கரைவள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வதினால், அதில் உள்ள 'வைட்டமின் ஏ' கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
* உணவில் உப்பின் அளவை குறைப்பது அவசியம். டின்னில் போட்டு வைக்கிற ஊறுகாய், தின்பண்டங்கள் போன்றவற்றை வாங்கும்போது, அவற்றில் 'நோ சால்ட்', 'நோ சோடியம்' லேபிள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
* வைட்டமின் ஏ அடங்கிய பழங்களையும், தயிரையும் காலை உணவில் செர்த்துகொள்வதனால் முதுமையில் கண்களில் ஏற்படும் பார்வைக் கோளாறைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
* பழங்களைக் கொண்டு பதப்படுத்திய ஜாம் சாப்பிடுவதால், முதுமையில் கண்களின் திரையில் ஏற்படுகின்ற பிரச்னையை தடுக்கலாம்.
* பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அடங்கியிருக்கின்றது. அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது முதுமையில் கூட எவ்வித கோளாறுமின்றி கண்கள் நலமுடன் இருக்கும். குறிப்பாக, குளுகோமா நோயைத் தவிர்க்கலாம்.
* வருத்த உணவு பொருட்கள், இனிப்புப் பண்டங்கள் போன்றவை வயதானவர்களின் பார்வை கோளாறுக்கு முக்கிய் காரணமாகிறது. எனவே, இந்த உணவுப் பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.
* அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், இதில் குளுகோமாவை எதிர்க்கும் ஆன்டியாக்சிடன்ட் மிகுதியாக உள்ளது.
* வாரம் இரண்டு நாட்களில் மீன் உணவு சாப்பிட வேண்டும். மீனில் இருந்து உடலுக்கு தேவையான 'ஒமேகா 3 பாடி ஆசிட்' கிடைக்கின்றது. நீங்கள் சைவ உணவை மட்டும் உட்கொள்பவராக இருந்தால், இதற்கு பதிலாக மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிட்டால் போதுமானது. உடற் பயிற்சியும் உடற் பரிசோதனையும் * வாரத்தில் ஐந்து நாட்களில் அரை மணி நேரம் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். இது, குளுகோமா கோளாறு உண்டாவதைத் தடுக்கிறது.
* தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஐந்து நிமிடம் கண்களுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது. கண்களை இடது - வலது புறமாகவும், மேலே - கீழேயும் அசைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். இப்படி செய்வதால் குளுகோமா கோளாறு வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
* 50 வயதைத் தாண்டியவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் கூடுதலாக இருக்கின்றவர்கள் எல்லா மாதமும் பரிசோதனை செய்து மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம்.
* சூரிய வெளிச்சத்தில் இருந்து கண்களுக்கு உண்டாகிற வறட்சியால் கண்களைப் பாதுகாப்பதற்காக சன் க்ளாஸ் அணிந்து கொள்ளலாம்.
* நீச்சல் செய்யும் போது கண்ணாடி அணிய வேண்டும். ஏனெனில், இது குளோரினில் இருந்து கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.
* பயணம் செய்யும் போது கண்ணாடி அணிந்து கொண்டால், கண்களை தூசி, புகை போன்றவற்றில் இருந்தது பாதுகாத்துக் கொள்ளலாம். * சூரிய வெளிச்சத்தில் இருக்கிற புற ஊதாக் கதிர்கள் கண்களில் படாமல் இருக்க, பெரிய தொப்பியை தலையில் அணிவது நல்லது.
* வேலை செய்யும்போதும், படிக்கும் போதும் அரை மணி நேரம் இடைவெளியில் தூரமாக இருக்கின்ற பொருட்கள் மீது பார்வையைச் செலுத்தி, 30 நொடிகள் ஓய்வு கொடுக்க வேண்டும்.
* மல்லிகை பூ, பெப்பர்மின்ட், வெணிலா போன்ற இயற்கையான வாசனை திரவியங்களை அவ்வப்போது. இது, மூளை நன்றாக வேலை செய்வதற்கும், மங்கலான வெளிச்சத்தில் நன்றாக பார்ப்பதற்கும் நமக்கு பயன்தருகிறது. * ஏ.சி, வெண்டிலேட்டர் போன்றவற்றை முகத்துக்கு நேராக வைப்பதைத் தவிர்க்கவும். இவை கண்களுக்கு மிகவும் கெடுதலாகும்.
* கண்களை சில மணி நேரம் இடைவெளியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படிச் செய்வதால் கண்களுக்குப் புத்துணர்வாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் கண்களில் தூசி, அழுக்கு போன்றவை பதிந்துவிடாமல் தடுக்கின்றது.
* தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு போடப்பட்டிருந்த மேக்கப்பை அழிக்கவும். கண்களைச் சுத்தப்படுத்திய பிறகே தூங்கச் செல்ல வேண்டும்.
* சுத்தமான டவல் உபயோகிப்பது நல்லது. வேறொருவர் பயன்படுத்திய டவலை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இத்தகைய எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், கண்கள் இரண்டும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

Tuesday, July 14, 2009

உடல் பருமனைக் குறைக்க

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் படி, உலகில் மிக வேகமாக பெருகிவரும் ஆபத்தாக, சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பதே உடல் பருமன் எனப்படும் ஒபிஸிட்டி. இது, நேரடி நோயாக கருதப்படாவிட்டாலும், பல்வேறு வியாதிகளுக்குக் காரணமாகிறது என்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
'குண்டாக இருக்கும் நீங்கள் முப்பதே நாட்களில் ஒல்லியாக வேண்டுமா?' என்பது போன்ற விளம்பரங்களில் உள்ள முகவரிகளை நாடலமா என்றும் சிலர் யோசிப்பதும் உண்டு. தேவையின்றி ரிஸ்க் எடுப்பது நல்லதல்ல. இதோ உங்களுக்கு சில எளிய குறிப்புகள். இதனை பின்பற்றுவதும் மிகவும் சுலபம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
உடல் பருமனின் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. நமது உயரத்தின் அளவைப் பொருத்து உடல் எடையும் இருக்க வேண்டும். நமது உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிடுவதும் மிகச் சுலபம்.
நமது உயரத்தின் அளவிலிருந்து 100 செ.மீ. அளவைக் குறைத்தால், அதுதான் சரியான உடலின் எடை. உதாரணத்துக்கு நீங்கள் 160 செ.மீ இருக்கிறீர்கள் எனில், 160-100=60. உங்களுக்கான சரியான எடை 60 கிலோகிராம். இதற்கு அதிகமாக இருந்தால், அதைக் குறைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டியது அவசியம்.
உடல் பருமனாவதற்கு, உணவுப் பழக்கவழக்கத்தில் உள்ள குறைபாடு மற்றும் சரிவர உடற்பயிற்சி செய்யாமை இவை இரண்டும்தான் முக்கிய காரணங்கள். ஹார்மோன் கோளாறு காரணமாகவும், பரம்பரை காரணமாகவும் குண்டாகுபவர்களில் சதவிகிதம் மிகக் குறைவுதான்.
உடல் பருமனைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமே தவிர, எடைக் குறைப்பதற்கான பிரத்யேக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது எனபதை கருத்தில் கொள்ள வேண்டும்.
உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை:
* எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
* தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்
* பட்டினிக் கிடத்தல் கூடாது
* அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது ௦
* உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்
* இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
* எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்
* கூல் ட்ரிங்ஸ்சுக்கு 'தடா' விதிக்க வேண்டும்.
* தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)
* இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
* 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
* கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
* கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்துங்கள்.
* அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.
குழந்தைகளுக்கு...
* குழந்தைகளுக்கான உணவில் கீரை, பருப்பு மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்தல்
* கொழுப்புச் சத்து உணவை அதிகமாக தவிர்த்தல்
* சாக்லெட், பிட்ஸா, சிப்ஸ் வகைகள், கூல் ட்ரிங்ஸ் போன்றவற்றை அதிகம் வாங்கிக் கொடுக்காமல், கட்டுக்குள் வைக்க வேண்டும்.
* அதிகம் டி.வி பார்ப்பது, அதிக நேரம் அமர்ந்து கொண்டு வீடியோ கேம்ஸ் விளையாடுவதைத் தவிர்த்தல்
* விளையாட்டு மைதானத்தில் உடல் சிரத்தை கொள்ளும் வகையிலான விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்

Saturday, July 11, 2009

நூல்
ஆசிரியர்
கோப்பு வரிசை எண் #
அகங்களும் முகங்களும்
சி. வில்வரத்தினம்
0065
அகநானூறு
பல ஆசிரியர்கள்
0229
அங்கயற்கண்ணி மாலை
உ.வே. சாமிநாத அய்யர்
0160
அச்சப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
அச்சோப் பதிகம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
அந்திம காலம் (நாவல்)
கார்த்திகேசு
0172
அடைக்கலப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
அதிசயப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
அபிராமி அம்மைப் பதிகம்
அபிராமி பட்டர்
0026
அபிராமி அந்தாதி
அபிராமி பட்டர்
0026
அபிராமி அந்தாதி / விளக்கஉரை
கவிஞர் கண்ணதாசன்
0026
அமலநாதிபிரான்
திருப்பாணாழ்வார்
0005b
அருட்பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
அழகரந்தாதி
??
0260
அழகின் சிரிப்பு
பாரதிதாசன்
0037
அழகர் கிள்ளை விடுதூது
சொக்கநாதப்புலவர்
0103
அழியா நிழல்கள்
ம.ஆ. நூமான்
0066
அற்புதப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
அறியப்படாதவர்கள் நினைவாக
ஆ. யேசுராசா
0107
அன்னைப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
அலை ஓசை / பாகம் 1 (பூகம்பம்)
கல்கி கிருஷ்ணமூர்த்தி
0205
அலை ஓசை / பாகம் 2(புயல்)
கல்கி கிருஷ்ணமூர்த்தி
0206
அலை ஓசை / பாகம் 3(புயல்)
கல்கி கிருஷ்ணமூர்த்தி
0208
அலை ஓசை / பாகம் 4(புயல்)
கல்கி கிருஷ்ணமூர்த்தி
0210
ஆசாரக் கோவை
பெருவாயின் முள்ளியார்
0024
ஆசைப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
ஆத்திச்சூடி
ஒளவையார்
0002
ஆதிநாதன் வளமடல்
செயங்கொண்டார்
0060
ஆனந்த மாலை (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
இரங்கேச வெண்பா
??
0230
இலக்கணச் சுருக்கம் - 1, 2
ஆறுமுகநாவலர்
0257
இராமாயண வெண்பா
மதுரகவி ஸ்ரீனிவாச அய்யங்கார்
0158a, 0158b
இராமானுஜ நூற்றந்தாதி
திருவரங்கத்து அமுதனார்
0008
இருண்ட வீடு
பாரதிதாசன்
0086
இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம்
மௌனகுரு, சித்ரலேகா, நூமான்
0117
இருபா இருப·து
அருணந்தி சிவாசாரியார்
0068
இசை அமுது
பாரதிதாசன்
0093
இளைஞர் இலக்கியம்
பாரதிதாசன்
0108
இன்னா நாற்பது
கபிலர்
0025
இன்னிலை
பொய்கையார்
0051, 0027
இனி ஒரு வைகறை
கே.பி. அரவிந்தன்
0097
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார்
0025
ஈழநாடு இலக்கிய வளர்ச்சி
தயாளசிங்கம்
0058
உண்மை விளக்கம்
மணவாசகங் கடனார்
0068
உண்மை நெறி விளக்கம்
உமாபதி சிவம்
0114
உயிருண்ணிப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
உலகநீதி
உலகநாதர்
0022
எக்காலக் கண்ணி
??
0155
எதிர்பாராத முத்தம்
பாரதிதாசன்
0159
எண்ணப் பதிகம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
எண்ணெய்ச் சிந்து
??
0149
ஏலாதி
கணிமேதாவியார்
0029
ஏரெழுபது
கம்பர்
0154
ஐந்திணை ஐம்பது
மாறன் பொறையனர்
0027
ஐந்திணை எழுபது
மூவாதியார்
0027
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம
வீரமாமுனிவர்
0258
ஐங்குறு நூறு
பாடியோர் - ஐவர்
0028
ஒப்பியல் இலக்கியம்
கே. கைலாசபதி
0102
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்
இரா. முருகன்
0185
கந்த குரு கவசம்

0034
கந்த சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள்
0034
கந்த புராணம் / பாகம் 1 (பாசுரம், உற்பத்திக்காண்டம் பாகம்1)
கச்சியப்ப சிவாச்சாரியார்
0239
கந்த புராணம் / பாகம் 2 (உற்பத்திக்காண்டம் பாகம்2)
கச்சியப்ப சிவாச்சாரியார்
0241
கந்த புராணம் / பகுதி 3 உற்பத்திக் காண்டம் (1329- 1783)
கச்சியப்ப சிவாச்சாரியார்
0249
கந்த புராணம் / பகுதி 4 : 2. அசுர காண்டம் (1 - 925 )
கச்சியப்ப சிவாச்சாரியார்
0249
கந்தர் அலங்காரம்
அருணகிரிநாதர்
0023
கந்தர் அநுபூதி
அருணகிரிநாதர்
0023
கந்தன் மணம்புரி சிந்து
சண்முகதாசன்
0149
களவழி நாற்பது
பொய்கையார்
0025
களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை
??
0160
கலிங்கத்துப்பரணி
செயங்கொண்டார்
0123
கலைசைக்கோவை.
ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர
0123
கலித்தொகை
பெருங்கொடுங்கோன், கபிலர், மருதநிலங்கன், சோழன் நல்லுத்திரன், நல்லாந்துவனார்
0221
கவிச்சக்ரவர்த்தி கம்பர்
இராகவ அய்யங்கார்
0202
கலேவலா -தமிழாக்கம் -1
உதயணன்
0032a, 0032b,
கலேவலா -தமிழாக்கம் - 2
உதயணன்
0033
கலேவலா -தமிழாக்கம் - 3
உதயணன்
0044
கலேவலா - உரைநடையில் கலேவலா
உதயணன்
0143a, 0143b
கண்ணன் பாட்டு
சி. சுப்ரமணிய பாரதியார்
0049
கண்ணி நூற்றைம்பது
மதுர கவிராயர்
0005a
கண்டப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
கபிலரகவல்
கபிலதேவர்
0261
கனவின் மீதி
கே.பி. அரவிந்தன்
0098
கல்லாடம்
கல்லாடர்
0098
காகம் கலைத்த கனவு
சோலைக்கிளி
0122
காசிக் கலம்பகம்
ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
0197,
காதல் நினைவுகள்
பாரதிதாசன்
0090
காதலினால் அல்ல (நாவல்)
ரெ. கார்த்திகேசு
0148
கார் நாற்பது
மதுரை கண்ணன் கூத்தனார்
0029
காரானை விழுப்பரையன் மடல்
செயங்கொண்டார்
0060
காளமேகப் புலவர் பாடல்கள்
கவி காளமேகம்
0220
காற்றுவழிக் கிராமம்
எஸ். வில்வரத்தினம்
0099
கீர்த்தி திரு அகவல்
மாணிக்க வாசகர்
0003
குடும்ப விளக்கு
பாரதிதாசன்
0089
குயில் பாட்டு
சி.சுப்ரமணிய பாரதியார்
0049
குயிற்பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
குலாப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
குழைப்பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
குறுந்தொகை
பல ஆசிரியர்கள் ( 205)
0110
குழைத்த பத்து -
மாணிக்க வாசகர்
0003
குறிஞ்சிப் பாட்டு
கபிலர்
0073
கைந்நிலை
புல்லங்காடனார்
0051
கொடிக்கவி
உமாபதி சிவம்
0114
கொன்றை வேந்தன்
ஒளவையார்
0002
கோதை நாச்சியார் தாலாட்டு -

0112
கோயில் திருப்பதிகம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
கோயில் மூத்த திருப்பதிகம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
சகலகலாவல்லிமாலை
குமரகுருபரர்
0144
சங்கற்ப நிராகரணம்
உமாபதி சிவம்
0133
சதுரகிரி அறப்பளீசுர சதகம்
அம்பலவாணக் கவிராயர்
0265
சண்முக கவசம்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
0034
சந்திரிகையின் கதை
சுப்ரமணிய பாரதியார்
0095
சரஸ்வதி அந்தாதி
கம்பர்
0052
சடகோபர் அந்தாதி
கம்பர்
0052
சிந்துப்பாவியல்
இரா. திருமுருகன்(அரங்க நடராசன் உரையுடன்)
0263
சிலப்பதிகாரம் / 1 பாகம் (புகார்க்காண்டம்)
இளங்கோ அடிகள்
0046
சிலப்பதிகாரம் / 2 பாகம் (மதுரைக்காண்டம்)
இளங்கோ அடிகள்
0111a
சிலப்பதிகாரம் / 3 பாகம் (வஞ்சிக்காண்டம்)
இளங்கோ அடிகள்
0111b
சிவகாமியின் சபதம் -பாகம் - 1 பூகம்பம்
கல்கி
0193
சிவகாமியின் சபதம் -பாகம் - 2 காஞ்சி முற்றுகை
கல்கி
0194
சிவகாமியின் சபதம் -பாகம் - 3 பிக்ஷ¤வின் காதல்
கல்கி
0195
சிவகாமியின் சபதம் -பாகம் - 4 சிதைந்த கனவு
கல்கி
0201
சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்)
அருணந்தி சிவாச்சாரியார
0080
சிவஞான போதம்
மெய்கண்ட தேவர்
0080
சிவப்பிரகாசம்
உமாபதி சிவம்
0115
சிவபுராணம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
சிவவாக்கியம்)
சிவவாக்கியர்
0003
சிறுபாணாற்றுப்படை
நத்தத்தனார்
0064
சித்தர் (பட்டினத்தார்) பாடல்கள்
பட்டினத்துப் பிள்ளையார்
0083
சித்தர் பாடல்கள் தொகுப்பு
பல ஆசிரியர்கள்
0076
சித்தர் பாடல்கள் (மெய்ஞ்ஞானப் புலம்பல்)
பத்திரகிரியார்
0074
சித்தர் பாடல்கள் தொகுப்பு 4
அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர்
0212
சித்தராரூட நொண்டிச்சிந்து
??
0149
சிதம்பர மும்மணிக் கோவை
குமரகுருபரர்
0163
சிதம்பரச் செய்யுட்கோவை
குமரகுருபரர்
0197
சிறிய திருமுறை
திருமங்கை ஆழ்வார்
0007
சிறு கதைத் தொகுப்பு - 1
இரா. கார்த்திகேசு
0131
சிறு கதைத் தொகுப்பு -2
இரா. கார்த்திகேசு
0140
சிறுகதைகள் - தொகுப்பு - 1
ஜெயகாந்தன்
0198
சிறுகதைகள் - தொகுப்பு - 2
ஜெயகாந்தன்
0199
சிறுகதைகள் - தொகுப்பு - 3
ஜெயகாந்தன்
0204
சிறுச்செந்தூர் கந்தர் கலிவெண்பா
குமர குருபரர்
0023
சிறுபஞ்ச மூலம்
காரியாசான்
0029
சீகாழிக் கோவை பிரபந்தத்திரட்டு - பகுதி 13
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0029
சீறாப்புராணம் காண்டம்-1 பாகம்-1
உமறுப் புலவர்
0167
சீறாப்புராணம் காண்டம்-1 பாகம்-2
உமறுப் புலவர்
0168
சீறாப்புராணம் காண்டம்-2 பாகம்-1
உமறுப் புலவர்
0174
சீறாப்புராணம் காண்டம்-2 பாகம்-2
உமறுப் புலவர்
0175
சீறாப்புராணம் காண்டம்-3 பாகம்-1
உமறுப் புலவர்
0178
சீறாப்புராணம் காண்டம்-3 பாகம்-2
உமறுப் புலவர்
0203
சுப்பிரமணியர் மேல் சிந்து
??
0149
சுய சரிதை
சி. சுப்ரமணிய பாரதியார்
0021
சூடாமணி நிகண்டு
மண்டல புருடர்
0118
சூளாமணி
தேலாமொழித்தேவர்
0035
செத்திலாப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
சென்னிப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0190
சோலைமலை இளவரசி
கல்கி கிருஷ்ணமூர்த்தி
0228
சோமேசர் முதுமொழி வெண்பா
சிவஞான முனிவர்
0137
ஞானப் பாடல்கள்
சி. சுப்ரமணிய பாரதியார்
0021
தண்ணீர் தேசம்
கவிஞர் வைரமுத்து
0011
தண்டி அலங்காரம்
தண்டியாசிரியர்
0145
தமிழ் விடுதூது
மதுரை சொக்கநாதர்
0040
தமிழ் கணினி அகராதி

1111
தமிழ் இயக்கம்
பாரதிதாசன்
0084
தமிழச்சியின் கதை
பாரதிதாசன்
0177
திணைமொழி ஐம்பது
கண்ணன் சேந்தனார்
0027
திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார்
0056
திருஅம்மானை (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருஏசறவு (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருஉந்தியார்
உய்யவந்ததேவ நாயனார்
0120
திருக்கடவூர் பதிகங்கள்
அபிராமி பட்டர்
0075
திருகடுகம்
நல்லாதனார்
0048
திருக்கழுக்குன்றப் பதிகம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருக்கோத்தும்பி (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருக்களிற்றுப்படியார்

0120
திருக்காளத்தி இட்டகாமிய மாலை
??
0160
திருக்குடந்தைத்திரிபந்தாதி பிரபந்தத்திரட்டு - பகுதி 17
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0264
திருக்கோத்தும்பி
மாணிக்க வாசகர்
0003
திருக்குறள்
திருவள்ளுவர்
0001
திருக்குறள் / ஆங்கில மொழியாக்கம்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
0017
திருக்குறள் - ஆங்கில மொழிபெயர்ப்பு
ஜி.யூ. பாப் மற்றும் பலர்
0153
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்கூட ராசப்பக் கவிராயர்
0106
திருக்குற்றால மாலை
திருக்கூட ராசப்பக் கவிராயர்
0106
திருக்குற்றாலப் பதிகம்
திருஞான சம்பந்தர்
0106
திருக்குறும்பாலப் பதிகம்
திருஞான சம்பந்தர்
0106
திருக்குறுந்தாண்டகம்
திருமங்கை ஆழ்வார்
0007
திருக்கை வழக்கம்
கம்பர்
0154
திருச்சந்த விருத்தம்
திருமழிசைபிரான்
0005
திருச்சதகம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருச்சாழல் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருத்தசாங்கம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருச்சிற்றம்பலக் கோவையார்
மாணிக்க வாசகர்
0054
திருச்செந்து¡ர் கந்தர் கலிவெண்பா
குமரகுருபரர்
0144
திருத்தில்லையமகவந்தாதி. பிரபந்தத்திரட்டு - பகுதி 15
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0262
திருத்தேள் நோக்கம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருத்தெள்ளோணம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருத்தொண்டர் புராணம், சருக்கம் 1 & 2
சேக்கிழார்
0209
திருத்தொண்டர் புராணம் , சருக்கம் 3
சேக்கிழார்
0215
திருத்தொண்டர் புராணம் , சருக்கம் 4 & 5
சேக்கிழார்
0218
திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்"சேக்கிழார் சுவாமிகள் புராணம் "
உமாபதி சிவாசாரியார்
0216
திருநெடுந்தாண்டகம்
திருமங்கை ஆழ்வார்
0007
திருப்புலம்பல் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார்
0005
திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருப்பாண்டிப் பதிகம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருப்படை ஆட்சி (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருப்படை எழுச்சி (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருப்பாவை
ஆண்டாள்
0005
திருப்புகழ் /பாகம் 1 (பாடல்கள் 1-330 (
அருணகிரிநாதர்
0180
திருப்புகழ் /பாகம் 2 (பாடல்கள் 331-670 )
அருணகிரிநாதர்
0187
திருப்புகழ் /பாகம் 3 (பாடல்கள் 671 - 1000 )
அருணகிரிநாதர்
0189
திருப்புகழ் /பாகம் 4 (பாடல்கள் 10011-1326)
அருணகிரிநாதர்
0191
திருப்பொன்னூஞ்சல் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி பிரபந்தத்திரட்டு - பகுதி 14
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0003
திருப்பொற்சுண்ணம் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருப்பூவல்லி (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருமந்திரம் - 1 (1,2 தந்திரங்கள்)
திருமூலர்
0004
திருமந்திரம் - 2 (3-6 தந்திரங்கள்)
திருமூலர்
0009
திருமந்திரம் - 3 (7-9 தந்திரங்கள்)
திருமூலர்
0010
திருமந்திரம் / பாயிரம்
திருமூலர்
0004
திருமந்திரம் / தந்திரம் -1
திருமூலர்
0004
திருமந்திரம் / தந்திரம் -2
திருமூலர்
0004
திருமந்திரம் / தந்திரம் - 3
திருமூலர்
0009
திருமந்திரம் / தந்திரம் - 4
திருமூலர்
0009
திருமந்திரம் / தந்திரம் -5
திருமூலர்
0009
திருமந்திரம் / தந்திரம் -6
திருமூலர்
0009
திருமந்திரம் / தந்திரம் -7
திருமூலர்
0010
திருமந்திரம் / தந்திரம் 8
திருமூலர்
0010
திருமந்திரம் / தந்திரம் -9
திருமூலர்
0010
திருமலையாண்டவர் குறவஞ்சி
??
0109
திருமாலை
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
0005
திருமுருகாற்றுப்படை
நக்கீரர்
0067
திருமுறை 8/ திருச்சிற்றம்பலக் கோவையார்
மாணிக்க வாசகர்
0054
திருமுறை 9 / திருஇசைப்பா
சேந்தனார்
0092
திருமுறை 9 / திருஇசைப்பா
கருவூர்த்தேவர்
0092
திருமுறை 9 / திருஇசைப்பா
பூத்¢ருரூத்த
0092
திருமுறை 9 / திருஇசைப்பா
கண்டராதித்தர்
0092
திருமுறை 9 / திருஇசைப்பா
வேணாட்டடிகள்
0092
திருமுறை 9 / திருஇசைப்பா
திருவாலியமுதனார்
0092
திருமுறை 9 / திருஇசைப்பா
திருமாளிகைத்தேவர்
0092
திருமுறை 10/ திருமந்திரம்
திருமூலர்
0004, 0009, 0010
திருமுறை 11-1/ பாசுரங்கள்
திருஆலவாய் உடையார்
0126
திருமுறை 11-1/ பாசுரங்கள்
காரைக்கால் அம்மையார்
0126
திருமுறை 11-1/பாசுரங்கள்
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
0126
திருமுறை 11-1/பாசுரங்கள்
சேரமான் பெருமாள் நாயனார்
0126
திருமுறை 11-1/பாசுரங்கள்
நக்கீரதேவ நாயனார்
0126
திருமுறை 11-1/பாசுரங்கள்
கல்லாடதேவ நாயனார்
0126
திருமுறை 11-1/பாசுரங்கள்
பரணதேவ நாயனார்
0126
திருமுறை 11-1/பாசுரங்கள்
இளம்பெருமான் அடிகள்
0126
திருமுறை 11-1/பாசுரங்கள்
அதிராவடிகள்
0126
திருமுறை 11-2/ பாசுரங்கள்
பட்டினத்துப் பிள்ளையார்
0127
திருமுறை 11-2/பாசுரங்கள்
நம்பியாண்டார் நம்பி
0127
திருமுறைகண்ட புராணம்
உமாபதி சிவாசாரியார்
0213
திருமொழி
பெரியாழ்வார்
0005
திருவண்டப்பகுதி (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருவந்தாதி /1
பொழ்கை ஆழ்வார்
0007
திருவந்தாதி /2
பூதத்தாழ்வார்
0007
திருவந்தாதி /3
பேயாழ்வார்
0007
திருவருட்பா / அகவல்
இராமலிங்க அடிகள்
0031
திருவருட்பா / திருமுறை 1(பாடல்கள் 1-570)
இராமலிங்க அடிகள்
0018
திருவருட்பா / திருமுறை 2.1 (பாடல்கள் 571-1006 )
இராமலிங்க அடிகள்
0018
திருவருட்பா / திருமுறை 2.2 (பாடல்கள் 1007 - 1958)
இராமலிங்க அடிகள்
0136
திருவருட்பா / திருமுறை 3 (பாடல்கள் 1959 - 2570)
இராமலிங்க அடிகள்
0124
திருவருட்பா / திருமுறை 4 (பாடல்கள் 2571 - 3028)
இராமலிங்க அடிகள்
0125
திருவருட்பா / திருமுறை 5 (பாடல்கள் 3029-3266)
இராமலிங்க அடிகள்
0128
திருவருட்பா / திருமுறை 6.1 (பாடல்கள் 3267 -3871)
இராமலிங்க அடிகள்
0130
திருவருட்பா / திருமுறை 6.2 (பாடல்கள் 3872 - 4614)
இராமலிங்க அடிகள்
0135
திருவருட்பா / திருமுறை 6.3 (பாடல்கள் 4615-5818)
இராமலிங்க அடிகள்
0146a 0146b
திருவருட்பா / தனிப்பாடல்கள்
இராமலிங்க அடிகள்
0135
திருவருட்பயன்
உமாபதி சிவாச்சாரியார்
0081
திருவாசகம்
மாணிக்க வாசகர்
0003
திருவாசகம் (ஆங்கில மொழியாக்கம்)
ஜி. போப் / மாணிக்க வாசகர்
0094
திருவாசிரியம்
நம்மாழ்வார்
0007
திருவார்த்தை (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருவாரூர் நான்மணிமாலை
குமரகுருபரர்
0164
திருவாழ்மொழி
நம்மாழ்வார்
0008
திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்
திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
0184
திருவிடைமருதூர் உலா
திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
0243
திருவிருத்தம்
நம்மாழ்வார்
0007
திருவெம்பாவை (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
திருவெண்பா (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
நாலாயிர திவ்ய பிரபந்தம் / 4
பல ஆசிரியர்கள்
0007
திருவெழுகூற்றிருக்கை
திருமங்கை ஆழ்வார்
0007
திருவுந்தியார் (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
தில்சை சிவகாமியம்மை இரட்டை மணிமாலை
குமரகுருபரர்
0176
துறைசையமகவந்தாதி பிரபந்தத்திரட்டு - பகுதி 16
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
246
தேசிக பிரபந்தம்
வேதாந்த தேசிகர்
0013
தேசிய கீதங்கள்
சி. சுப்ரமணிய பாரதியார்
0012
தேவாரம் -முதல் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-721)
திருஞான சம்பந்தர்
0150
தேவாரம் -முதல் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 722-1469)
திருஞான சம்பந்தர்
0151
தேவாரம் -இரண்டாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-654)
திருஞான சம்பந்தர்
0157
தேவாரம் -இரண்டாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 655-1331)
திருஞான சம்பந்தர்
0162
தேவாரம் -மூன்றாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1- 713)
திருஞான சம்பந்தர்
0173
தேவாரம் -மூன்றாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 714 -1347)
திருஞான சம்பந்தர்
0179
தேவாரம் -நான்காம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-487)
திருநாவுக்கரசர்
0181
தேவாரம் -நான்காம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 488-1070)
திருநாவுக்கரசர்
0182
தேவாரம் -ஐந்தாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-519)
திருநாவுக்கரசர்
0186
தேவாரம் -ஐந்தாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 520 - 1016)
திருநாவுக்கரசர்
0188
தேவாரம் -ஆறாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-508)
திருநாவுக்கரசர்
0192
தேவாரம் -ஆறாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 509-981)
திருநாவுக்கரசர்
0196
தேவாரம் - ஏழாம் திருமுறை - பகுதி 1 (பாடல்கள் 1-517)
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
0207
தேவாரம் - ஏழாம் திருமுறை - பகுதி 2 (பாடல்கள் 518-1026)
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
0211
தொல்காப்பியம்
தொல்காப்பியர்
0100
நந்திக்கலம்பகம்
??
0142
நடராசப் பத்து
முனிசாமி முதலியார், சிருமாவூர்
0020
நளவெண்பா
புகழேந்திப் புலவர்
0015
நல்லிசைப் புலமை மெல்லியலர்கள்
இராகவ ஐயங்கார்
0015
நல்வழி
ஒளவையார்
0002
நன்னெறி
துரைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்
0139
நன்னூல் -மற்றொரு பதிப்பு
பவநந்தி முனிவர்
0152
நன்னூல்
பவநந்தி முனிவர்
0147
நால்வர் நான்மணி மாலை
துரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
0138
நான்மணிக்கடிகை
விளம்பிநாகனார்
0047
நான்முகன் திருவந்தாதி
திருமழிசை ஆழ்வார்
0007
நாச்சியார் திருமொழி
ஆண்டாள்
0005
நாமக்கல் கவிஞர் பாடல்கள் -1
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
0072
நாமக்கல் கவிஞர் பாடல்கள் -2
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
0079
நாமக்கல் கவிஞர் பாடல்கள் -3
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
0085
நாலடியார்
பல ஆசிரியர்கள்
0016
நாலாயிர திவ்ய பிரபந்தம் /1
பல ஆசிரியர்கள்
0005a 0005b
நாலாயிர திவ்ய பிரபந்தம் /2
திருமங்கை ஆழ்வார்
0006a 0006b
நாலாயிர திவ்ய பிரபந்தம் / 3
பல ஆசிரியர்கள்
0007
நாலாயிர திவ்ய பிரபந்தம் / 4
பல ஆசிரியர்கள்
0008
நீத்தல் விண்ணப்பம்
மாணிக்க வாசகர்
0003
நீதி நெறி விளக்கம்
குமரகுருபரர்
0144
நீதி வெண்பா
??
0137
நெஞ்சு விடு தூது ஸ்ரீஈசான்ய ஞான தேசிகர் மீது
????
0200
நெஞ்சு விடு தூது
உமாபதி சிவம்
0115
நெடுநல் வாடை
- நக்கீரனார்
0070
நேமிநாதம்
குணவீர பண்டிதர்
0101
பகவத் கீதை / தமிழாக்கம், விளக்கவுரை
சி. சுப்ரமணிய பாரதியார்
0014
பட்டினப்பாலை
கடியலுர் உருத்திரங் கண்ணனார்
0077
பரிபாடல்
பல ஆசிரியர்கள் ( 13 )
0087
பரிபாடல் திரட்டு
?
0088
பதிற்றுப்பத்து
பல ஆசிரியர்கள்
0038
பல்வகைப் பாடல்கள்
சி. சுப்ரமணிய பாரதியார்
0021
பழமொழி நானூறு
மூன்றுரை அறையனார்
0036
பழமொழி விளக்கம் /"தண்டலையார் சதகம்"
படிக்காசுப் புலவர்
0219
பழனி இரட்டைமணி மாலை
??
0160
பழனியாண்டவர் காவடிச்சிந்து
முத்துக் கறுப்பண்ணன்
0149
பழைய இராமயணம்
??
0061
பாஞ்சாலி சபதம்
சி. சுப்ரமணிய பாரதியார்
0091
பாண்டிய, சோழ, விஜயநகர அரசர் மெய்கீர்த்திகள்
???
0134
பண்டாய நான்முறை (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
பண்டார மும்மணிக்கோவை
ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
0197
பாண்டியன் பரிசு
பாரதிதாசன்
0104
பாட்டுக்கோட்டை பாடல்கள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
0161
"பார்த்திபன் கனவு" பாகம் - 1-2
கல்கி கிருஷ்ணமூர்த்தி
0214
பார்த்திபன் கனவு / பாகம் 3
கல்கி கிருஷ்ணமூர்த்தி
0223
பாரதியார் பாடல்கள் / 1 (தேசிய கீதங்கள், தெய்வப் பாடல்கள்)
சி. சுப்ரமணிய பாரதியார்
0012a
பாரதியார் பாடல்கள் / 2 (ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள், சுயசரிதை)
சி. சுப்ரமணிய பாரதியார்
0021
பாரதியார் பாடல்கள் / 3
சி. சுப்ரமணிய பாரதியார்
0049
பிரபந்தத் திரட்டு / பாகம் 1
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0129
பிரபந்தத் திரட்டு / பாகம் 2
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0184
பிரபந்தத் திரட்டு / பாகம் 3 சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0190
பிரபந்தத் திரட்டு / பாகம் 4 காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0232
பிரபந்தத் திரட்டு / பாகம் 5 ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0233
பிரபந்தத் திரட்டு / பாகம் 6 பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0234
பிரபந்தத் திரட்டு / பாகம் 7 திருவிடைக்கழிமுருகர் பிள்¨த்தமிழ்
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0235
பிரபந்தத் திரட்டு / பாகம் 8 ஸ்ரீஅம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0236
பிரபந்தத் திரட்டு / பாகம் 9 வாட்போக்கிக் கலம்பகம்
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0237
பிரபந்தத் திரட்டு / பாகம் 10 திருவாவடுதுறை ஆதினத்துக் குருபரம்பரைஅகவல்
தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0238
பிரபந்தத் திரட்டு / பாகம் 11 அம்பலவாணதேசிகர் கலம்பகம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
0240
பிரதாப முதலியார் சரித்திரம்
மயூரம் வேதநாயகம் பிள்ளை
0217
பிடித்த பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
புணர்ச்சிப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
புரட்சிக் கவிதைகள் -பாகம் 1, 2
கவிஞர் பாரதிதாசன்
0166
புறநானூறு

0057
பெரிய திருமடல்
திருமங்கை ஆழ்வார்
0007
பெரிய திருமொழி
திருமங்கை ஆழ்வார்
0006
பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார்
0007
பெரிய புராணம், சருக்கம் 1 & 2
சேக்கிழார்
0209
பெரிய புராணம், சருக்கம் 3
சேக்கிழார்
0215
பெரிய புராணம், சருக்கம் 4 & 5
சேக்கிழார்
பெரிய புராணம் / சருக்கம் 6, பாகம் 1
சேக்கீழார்
0224
பெரிய புராணம் / சருக்கம் 6, பாகம் 2
சேக்கீழார்
0225
பெரிய புராணம் / சருக்கம் 6, பாகம் 3
சேக்கீழார்
0226
பெரிய புராணம் / சருக்கம் 6, பாகம் 4
சேக்கீழார்
0227
0218
பெருமாள் திருமொழி
குலசேகரப் பெருமாள்
0005
பெரும்பாணாற்றுப்படை
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
0069
பொருநாறாற்றுப்படை
முடத்தாமக்கண்ணியார்
0063
பொன்னியின் செல்வன்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
0169a, 0169b, 0169c, 0169d, 0169e, 0169f, 0169g, 0169h, 0169i, 0169j, 0169k, 0169l
போற்றிப் பொற்றொடை
உமாபதி சிவம்
0114
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை
நாராயண தீட்சதர்
0160
மகாபரத சூடாமணி
??
0132
மதுரைக் கோவை
நிம்பைச் சங்கர நாரணர்
0259
மதுரை மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழ்
குமர குருபரர்
0043
மதுரை மீனாட்சிஅம்மை இரட்டைமணிமாலை
குமர குருபரர்
0170
மதுரைக் கலம்பகம்
குமர குருபரர்
0045
மதுரைக் காஞ்சி
மாங்குடி மருதனார்
0071
மதுராபுரி அம்பிகைமாலை
குலசேகர பாண்டியன்
0050
மணிமேகலை
சீத்தலைச்சாத்தனார்
0141
மனசே ரிலாக்ஸ் பிளிஸ்-I
சுவாமி சுகபோதானந்தா
9998
மனசே ரிலாக்ஸ் பிளிஸ்-II
சுவாமி சுகபோதானந்தா
9999
மனோண்மணீயம்
பி. சுந்தரம் பிள்ளை
0105
மரணத்தில் வாழ்வோம் (கவிதை தொகுப்பு)
பல ஆசிரியர்கள்
0088
மலைபடு கடாம்
பெருங்கௌசிகனார்.
0078
மீனாட்சியம்மை குறம்
குமர குருபரர்
0171
முகம் கொள்
கே.பி. அரவிந்தன்
0096
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
குமர குருபரர்
0170
முத்தொள்ளாயிரம்
??
0121
முதுமொழிக் காஞ்சி
மதுரை கூடலூர் கிழார்
0025
முல்லைப் பாட்டு /ஆராய்ச்சி
மறைமலை அடிகள்
0053
மூதுரை
ஒளவையார்
0002
மூவருலா
ஒட்டக்கூத்தர்
0116
மோகவாசல் (சிறுகதைத் தொகுப்பு)
இரஞ்ச குமார்
0082
வடமலை நிகண்டு
ஈஸ்வர பாரதி
0113
வடிவுடை மாணிக்க மாலை
இராமலிங்க அடிகள்
0031
வாழாப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
வளையாபதி
??
0062
விநாயகர் நான்மணிமாலை
மகாகவி பாரதியார்
0062
வினா வெண்பா
உமாபதி சிவம்
0115
விவிலியம் / புதிய ஏற்பாடு /1

0019a, 0019b
விவிலியம் / புதிய ஏற்பாடு / 2

0030
விவிலியம் / புதிய ஏற்பாடு / 3

0039
விவிலியம் / புதிய ஏற்பாடு / 4

0041
விவிலியம் / புதிய ஏற்பாடு / 5

0042
விவிலியம் /புதிய ஏற்பாடு / ஏக்ட்ஸ்

0039
விவிலியம் / புதிய ஏற்பாடு / கொரிந்தியர்கள்

0041
விவிலியம் / புதிய ஏற்பாடு /எஸியன்ஸ்

0042
விவிலியம் /புதிய ஏற்பாடு / காலாசியர்கள்

0042
விவிலியம் / புதிய ஏற்பாடு / யோவான்

0030
விவிலியம் / புதிய ஏற்பாடு / லூக்கு

0030
விவிலியம் /புதிய ஏற்பாடு / மார்க்கு

0019a 0019b
விவிலியம் /புதிய ஏற்பாடு / மாத்தியூ

0019
விவிலியம் / புதிய ஏற்பாடு / ஹீப்ரு

0042
விவிலியம் / புதிய ஏற்பாடு / பிலமோன்

0042
விவிலியம் / புதிய ஏற்பாடு /தெஸலோனியர்கள்

0042
விவிலியம் / புதிய ஏற்பாடு /திமோதி

0042
விவிலியம்/ புதிய ஏற்பாடு -6 / யாக்கோப்பு திருமுகம்

0156
விவிலியம்/ புதிய ஏற்பாடு -6 / பேதுரு முதல், இரண்டாம் திருமுகம்

0156
விவிலியம்/ புதிய ஏற்பாடு -6 / யோவான் மூன்றாம் திருமுகம்

0156
விவிலியம்/ புதிய ஏற்பாடு -6 / யூதா திருமுகம், திருவெளிப்பாடு

0156
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 1 - தொடக்கநூல்

0242a
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 2. விடுதலைப் பயணம்

0242b
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 3. லேவியர்

0242c
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 4-எண்ணிக்கை

0246a
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 5. இணைச் சட்டம

0246b
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 6. யோசுவா

0246c
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 7. நீதித்தலைவர்கள

0246d
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 8. ரூத்து

0248
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல

0248
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல

0248
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல்

0252a
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல்

0252a
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல்

0252b
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல்

0252b
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 15 - எஸ்ரா

0256a
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 16 - நெகேமியா

0256b
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 17 - எஸ்தர்

0256c
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 18 - யோபு

0256d
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 19 - திருப்பாடல்கள்

0256e
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 20 - நீதிமொழிகள்

0256f
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 21 & புத்தகம் 22

0266a
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 23 - எசாயா

0266b
விவிலியம்/ பழைய ஏற்பாடு /புத்தகம் 24 - எரேமியா

0266c
விவேக சிந்தாமணி
??
0059
வினாயகர் அகவல்
ஒளவையார்
0231
வெற்றிவேற்கை
அதிவீரராம பாண்டியர்
0139
வேல்விருத்தம்
அருணகிரிநாதர்
0023
யாப்பெருங்கலக் காரிகை
அமிதசாகரர்
0055
யாத்திரைப் பத்து (திருவாசகம்)
மாணிக்க வாசகர்
0003
tiruvAcakam / English Translation
Rev. G.U. Pope
0222